தொடரும் கிளாம்பாக்கம் அவலம்.. கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனை, கொதிப்பில் மக்கள்

Kilambakkam Bus Stand: சென்னைக்கு மிகப்பெரிய அடையாளமே கோயம்பேடு என்று சொல்லலாம். இப்படி மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் முதல்வர் இதை திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் அங்கிருந்தே இயங்க ஆரம்பித்தது. இதுதான் தற்போது மக்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஊருக்கு போக கிளம்பும் மக்கள் பஸ் ஸ்டாண்டுக்கு போவதே ஊருக்கு போவது போல் இருக்கே என புலம்பும் நிலைக்கு வந்தனர்.

இப்படி பல அதிருப்திகள் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கத்தில் சரிவர பேருந்துகள் இயங்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. அதிலும் இரவு நேரத்தில் வந்து இறங்கும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல போதிய பஸ் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

Also read: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க இதுதான் காரணமா?. முடிவுக்கு வருகிறதா CMBT-யின் சகாப்தம்

அது மட்டுமல்லாமல் திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல பஸ் கிடைக்கவில்லை. அதேபோல் பஸ் ஸ்டாண்ட் அருகில் டீக்கடை, ஹோட்டல் என எந்த அடிப்படை வசதியும் இல்லை என்ற புகார்களும் ஒரு பக்கம் எழுந்து கொண்டிருக்கிறது.

மற்றொரு பக்கம் 8 மணி நேரத்திற்கும் மேலாக பஸ்ஸுக்காக காத்திருக்கிறோம் என பெண்கள் புலம்புவதையும் பார்க்க முடிகிறது. மேலும் 2000 பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பஸ் தான் வருகிறது என மக்கள் கொதித்துப் போய் பேசும் வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

இப்படி பிரச்சனை பெரிதானதை அடுத்து தற்போது போலீசார் மக்களை சமாதானப்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சரும் இதற்கான விளக்கத்தை கொடுத்து வருகிறார். ஆனாலும் சமாதானம் அடையாத மக்கள் இந்த பஸ் ஸ்டாண்ட் எங்களுக்கு வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also read: 2024 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள்.. போட்டி போடும் டாப் ஹீரோக்கள்