ரீலில் மட்டுமல்ல ரியல் லைஃபிலும் ஹீரோ தான்.. பிரபல நடிகரை பாராட்டும் ரசிகர்கள்.

பிரபல கன்னட நடிகரான சுதீப், ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நான் ஈ படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான புலி, முடிஞ்சா இவனனப்புடி ஆகிய படங்களில் நடித்திருந்தார். பாகுபலி படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது விக்ராந்த் ரோனா என்ற பான் இந்தியா படத்தில் சுதீப் நடித்து வருகிறார். இப்படம் ஐந்து மொழிகளில் உருவாகிறது. நடிகர் சுதீப் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை சுதீப் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது சொந்த ஊரான ஷிவமோகாவில், 133 வருட பழமையான அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார்.

kiccha-sudeep-cinemapettai
kiccha-sudeep-cinemapettai

அங்குள்ள அரசு கன்னட தொடக்கப்பள்ளி சிதிலமடைந்து காணப்பட்டுள்ளது. இதுபற்றி செய்தி வெளியானதும் அதை நடிகர் சுதீப் தத்தெடுத்துள்ளார். அந்தப் பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கவும் அங்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

பள்ளியை தத்தெடுத்த நடிகர் சுதீப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. இதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே ஒரு பள்ளியை தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்