பப்ளிசிட்டியை வச்சிட்டு பணம் சம்பாதிக்க கட்சி கட்சியாக தாவும் குஷ்பு.. வெறுப்பை கக்கிய ரிப்போர்ட்டர் பாண்டியன்

Kusboo: தேர்தல் களம் ஆரம்பித்ததில் இருந்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் ஒவ்வொன்றும் அப்பட்டமாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் குஷ்பூ மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வெளிப்படையாக அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன்.

அதாவது தனக்கு பப்ளிசிட்டி இருக்கு என்ற ஒரு காரணத்தை வைத்து இப்பொழுது வரை பிழைத்துக் கொண்டு வருகிறார். குஷ்பூ எந்த கட்சிக்கு போனாலும் அங்கே எதையாவது வாங்காமல் வரமாட்டார். அப்படித்தான் முதன் முதலில் திமுக கட்சியில் சேர்ந்த பொழுது பத்திரிகையாளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பெருங்குடி நிலங்களை அனைத்தையும் பேசி எழுதி வாங்கி விட்டார்.

அது மட்டும் இல்லை என்று சொல்ல சொல்லுங்க. நான் நேரடியாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கிறேன். நான் சொல்வது மட்டும் பொய்யாக இருந்தால் என் மீது கேஸ் கூட போட்டுக்கோங்க என்று பத்திரிக்கையாளர் பாண்டியன் வெறுப்பை கக்கும் அளவிற்கு மொத்தத்தையும் கக்கி விட்டார்.

அதன் பின் திமுக கட்சியில் போன காரியம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் திமுகவிலிருந்து விலகி விட்டார். பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கேயும் பல ஊழல்களை பண்ணி வெளியே வந்துவிட்டார். இப்பொழுது பிஜேபியில் சேர்ந்து அங்கேயும் நல்ல வருமானத்தை பார்த்து வருகிறார்.

பிழைக்க தெரிந்த குஷ்பூ

அதாவது பிஜேபி-யில் இருந்து வருஷத்துக்கு குஷ்புக்கு 100 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. எந்தவித கஷ்டமும் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே வருமானத்தை ஈட்டி பிழைத்துக் கொண்டு வருகிறார் குஷ்பூ.

அதனால் தான் எவ்வளவு அசிங்கப்பட்டு அவமானப்பட்டாலும் அந்த கட்சியில் இருந்து போகாமல் தற்போது வரை அதிலேயே இருக்கிறார்.

இதனால் தான் ராதிகாவும், பிஜேபி கட்சியில் சேர்ந்து விட்டதாகவும், இவருக்கு பின்னணியில் இருந்து பேராசையில் தூண்டிவிட்டது சரத்குமார் தான் என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில் மத்திய அரசின் விளம்பரங்கள் அனைத்தையும் ராடன் மீடியாவில் ஒளிபரப்பு செய்யலாம் என்று அதற்கேற்ற டீலிங்கும் நடந்து விட்டது என்று பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் பப்ளிசிட்டியை வைத்து ஒவ்வொரு முறையும் கட்சி கட்சியாக தாவிக்கொண்டு பெருத்த வருமானத்தை சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறார்கள். இதுல வேற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி என்று சொல்வது எந்த அளவிற்கு பொருத்தமாக இருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்