திரிஷாவுக்கு வக்காலத்து வாங்கி சர்ச்சையில் சிக்கிய குஷ்பூ.. மன்சூருக்கு முன்னாடி இவங்க ஜெயிலுக்கு போயிடுவாங்களோ

Trisha-Kushboo: அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் தலையை விடவில்லை என்றால் அது குஷ்பூ ஆகவே இருக்க முடியாது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் எப்போதுமே கவலைப்பட மாட்டார். அப்படித்தான் தற்போது அவர் ஒரு புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் த்ரிஷாவுக்கு பிரச்சனை என்று குரல் கொடுக்க வந்தவருக்கே இப்போது பிரச்சனை வந்திருக்கிறது. அதாவது திரிஷாவை மன்சூர் அலிகான் மோசமாக பேசிய விவகாரத்தில் குஷ்பூ கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.

Also read: த்ரிஷாவுக்காக வரிஞ்சு கட்டிட்டு வந்த 4 பிரபலங்கள்.. திருமணத்திற்கு முன்பே உறவு, துவைத்து காய போட்ட நெட்டிசன்கள்

அதில் அவர் சேரி என்று சொன்ன ஒரு வார்த்தை இப்போது அவருக்கே ஆப்பாக முடிந்திருக்கிறது. ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அவர் அதை சமாளித்திருக்கிறார். அந்த வகையில் பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அன்பு என்று அர்த்தம் என சப்பை கட்டு கட்டி இருக்கிறார்.

மாட்டிக்கிட்டதும் நல்லா உருட்டும் குஷ்பூ

வாழ்றது தமிழ்நாட்டுல இதுல எங்க இருந்து பிரெஞ்சு மொழி வருது என மக்கள் அவரின் விளக்கத்தை கேட்டு கொந்தளித்து போய் உள்ளனர். போற போக்க பார்த்தா த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் ஜெயிலுக்கு போறாரோ இல்லையோ குஷ்பூ இந்த சர்ச்சையால் உள்ள போயிடுவாங்க போல.

அந்த அளவுக்கு அவருக்கு எதிராக இப்போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஆக மொத்தம் திரிஷாவுக்காக சப்போட்டா விற்க வந்து வாண்ட்டடாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் குஷ்பூ. இது இன்று நேற்று கிடையாது. எப்போதுமே அவர் இப்படித்தான் வாயை கொடுத்து மாட்டிக் கொள்வார்.

அப்போதெல்லாம் எதையாவது சொல்லி சமாளிக்கும் அவர் இப்போதும் அந்த தந்திரத்தையே பயன்படுத்தியுள்ளார். ஆனாலும் அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் குஷ்பூவுக்கு இருந்த கொஞ்சம் நஞ்ச மரியாதையும் இப்போது மொத்தமாக போயிருக்கிறது.

Also read: மன்சூரை விட த்ரிஷாவை கொச்சைப்படுத்திய சர்ச்சை நடிகர்.. இதுல குஷ்பு மீனா மானமும் போச்சு