வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

உண்மையாய் ஏகே 47ஐ தூக்கிய ராக்கி பாய்.. சூர்யாவை விட ஒரு படி மேலே போன யாஷ்

சூர்யாவிற்கு சமீப காலமாக நினைத்தது எதுவும் கைகூடி வரவில்லை. வணங்கான் படத்திலிருந்து ஆரம்பித்த பிரச்சனை புறநானூறு படம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நடிப்பதாக இருந்த ஹிந்தி படம் மற்றும் தெலுங்கு படம் கூட டிராப் ஆகியுள்ளது.

இதை போல் தெலுங்கு நடிகர் கேஜிஎப் புகழ் ராக்கி பாய், யாஷ்க்கும் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. தற்சமயம் கீதூ மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் சூட்டிங் இப்பொழுது நடைபெறாமல் நின்றுள்ளது.

டாக்சிக் படத்தின் இயக்குனர் மோகன்தாஸ் பட ஸ்கிரிப்டில் ஒன்றை கொடுத்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதேதோ காட்சிகளை எடுக்கிறார் என யாஷ் சண்டை போட்டு வருகிறார். இதனால் இப்பொழுது அந்த படத்தின் சூட்டிங் பிரச்சனையில் உள்ளது.

சூர்யாவை விட ஒரு படி மேலே போன யாஷ்

கீதூ மோகன்தாஸ் இடம் இப்பொழுது யாஷ் முழு ஸ்கிரிப்டையும் கேட்டுள்ளார். அதை ரெடி செய்து கொடுத்த பிறகு இந்த படத்தின் சூட்டிங் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். இப்பொழுது மோகன் தாஸ் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து வருகிறார். இதே போல தான் பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் பிரச்சனை நடந்துள்ளது.

வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு முன்பு சூர்யா தான் 10 நாட்கள் ஹீரோவாக நடித்தார். ஆனால் ஸ்கிரிப்டில் இருப்பதை பாலா எடுக்கவே இல்லையாம், அதை விட்டுவிட்டு ஏதேதோ காட்சிகளை எடுத்ததால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு படத்தை நிறுத்திவிட்டார் சூர்யா. அதேபோல் தான் இப்பொழுது டாக்சிக் பட விவகாரமும் மாறி உள்ளது.

- Advertisement -

Trending News