கேஜிஎஃப் படத்தில் மிரட்டிய வில்லன் யார் தெரியுமா.. அவர் செய்யும் வேலை தெரிந்தால் ஒரே ஷாக்தான்

வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஹீரோக்களே வில்லனாக நடிக்கும் சூழ்நிலை வந்துள்ளது. இந்நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை யாராவது மிரள வைத்தால் அவர் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு.

அந்த இடத்தைதான் தற்பொழுது நிரப்பி வருகிறார் கே ஜி எப் படத்தில் கருடன் கதாபாதிரத்தில் நடித்த வில்லன். கருடன் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கேஜிஎஃப் பட வில்லன் ராமச்சந்திர ராஜுதான். சண்டை காட்சிகளே இல்லாமல் அனைவரையும் மிரட்டி வைத்திருப்பார்.

உனக்கு படத்தில் நடிக்கும் ஆசை இருந்தால் கேஜிஎஃப் படத்திற்காக நடிப்பதற்கு ஆட்கள் தேர்வு நடைபெறும். அப்போது வருமாறு கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முடி மற்றும் தாடியை வளர்த்து வரச் சொல்லியுள்ளார் யாஷ். அதன்பிறகுதான் இவருக்கு கே ஜி எஃப் படத்தில் வில்லன் கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

அடுத்து ஒரு முறை விமான நிலையத்திற்கு யாஷ் மற்றும் கருடன் வந்துள்ளனர். அப்போது ரசிகர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டதை பார்த்த யாஷ்
கருடனிடம் இனிமேல் என்னுடன் வர வேண்டாம். நீ தனியாகவே வா உன்னை பார்ப்பதற்கு என பல ரசிகர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.

தற்போது கூட கார்த்திக் நடிக்கும் சுல்தான் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் கருடன் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் வில்லனாக நடிப்பதற்கு தேர்வாகி உள்ளதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

kgf
kgf

பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி போன்ற வில்லன் நடிகர்கள் தற்பொழுது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் சினிமாவிற்கான விளல்ன் இடம் தற்பொழுது காலியாகத்தான் இருக்கிறது. அதனை பயன்படுத்தி பலர் வில்லனாக நடித்து பெயர் பெற்றால் பெரிய எதிர்காலமே உள்ளது. அதை புரிந்துதான் தற்போது விஜய் சேதுபதியும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -