திருவிழாவை குறிவைத்த கே ஜி எஃப் 2.. சிக்கலில் அண்ணாத்த, வலிமை

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாவதில் மிகப் பெரிய படங்களாக எதிர்பார்க்கப்படுவது அண்ணாத்த மற்றும் வலிமை. அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

அதனைத் தொடர்ந்து தடுமாறி வரும் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியீடு என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாம். விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்களை போல மீண்டும் அஜித் மற்றும் ரஜினி படங்கள் நேரடியாக மோத உள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் அந்த நேரத்தில் தியேட்டர்களில் 100 சதவிகிதம் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இரண்டு படங்களும் தனித்தனியாக வந்தால் தான் மிகப்பெரிய வசூல் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் என்னை மறந்து விடாதீர்கள் என களத்தில் குதித்துள்ளது கே ஜி எஃப் 2. கே ஜி எஃப் படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து கே ஜி எஃப் 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் கூட பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

kgf2-yash-cinemapettai
kgf2-yash-cinemapettai

இந்நிலையில் கே ஜி எஃப் 2 படம் ஜூலை 16ஆம் தேதி வெளியாவதாக ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் தற்போது அந்தப் படமும் தீபாவளி சமயத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறதாம். அப்படியே தீபாவளி இல்லை என்றாலும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கன்ஃபார்ம் என்கிறது சினிமா வட்டாரம்.

தீபாவளிக்கு ரஜினி வந்தால் கிறிஸ்துமஸுக்கு அஜித் வரலாம் என இருந்த நேரத்தில் கே ஜி எஃப் 2 களத்தில் குதித்துள்ளதால் வலிமை வசூலில் அடிவாங்கும் என்று யோசிக்கின்றனர். இருந்தாலும் முன்ன பின்ன பார்த்து அட்ஜஸ் பண்ணி வலிமை படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்கிறார்கள்.

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -