SP கலியமூர்த்திக்கு தண்ணி காட்டிய கேரளா நாயர்யோட பெண் வாரிசு.. தோல்வி கற்றுக் கொடுத்த தரமான பாடம் தெரிஞ்சுக்கோங்க

SP Kaliyarmurthy Motivational Speech: எப்பொழுதுமே ஒரு தோல்வி ஏற்பட்டு விட்டால் அதை அசிங்கம் அவமானம் என்று நினைக்காமல் அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி யார் ஒருவர் பட்ட அவமானத்தை படிக் கற்களாக மாற்றி முன்னேறுகிறார்களோ, அவர்கள் மட்டுமே வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டுவார்கள். இதை எத்தனையோ புத்தகத்திலும் யாரோ ஒருவர் சொல்லியும் கேட்டிருப்போம்.

ஆனால் அவர்கள் சொல்லியது அனைத்தும் அனுபவத்தினாலும் வெற்றியின் ருசியை பார்த்ததினாலும் தான் மற்றவர்களுக்கு ஒரு பாடகமாக சொல்கிறார்கள். அந்த வகையில் SP கலியமூர்த்தி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் முன்னாள் காவல்துறை அதிகாரியாக 35 வருடமாக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இதற்கிடையில் லக்னோ, காஷ்மீர், நாசிக் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகில இந்திய காவல் பணி போட்டி மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஹர்ட்ரிக் தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார்.

தன்னம்பிக்கையுடன் பேச்சாளராக இருக்கும் எஸ்பி கலியமூர்த்தி

இவருடைய பனிக்காலத்தில் முதல்வர் விருது, சிறப்பான சேவைகாண குடியரசுத் தலைவர் மற்றும் காவல் பதக்கத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது ஓய்வு பெற்ற நிலையிலும் இவரால் முடிந்த ஊக்கத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதமாக பேச்சாளராக மக்களை ஊக்குவித்து வருகிறார். அப்படிப்பட்டவர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தும் பொழுது இவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் இவருக்கு மூன்று முறை தங்கப்பதக்கம் கிடைத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு கீழே ஒரு சின்ன துளி புள்ளி அடிப்படையில் இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த அச்சுதன் நாயர் பெற்றிருக்கிறார். ஆனால் இவர் அனுபவத்திலும் வயதிலும் திறமையிலும் முதன்மையாக இருக்கக்கூடியவர்.

அப்படிப்பட்டவர் ஒரு சில புள்ளிகள் அடிப்படையில் எஸ்பி கலியமூர்த்தி இடம் தோல்வி தழுவி இருக்கிறார். ஆனாலும் ஒரு சின்ன வார்த்தை கூட எதுவும் சொல்லாமல் அப்படியே திரும்பி போய் இருக்கிறார். பிறகு நான்காவது முறையாக எஸ்பி கலியமூர்த்திக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றிருக்கிறது. அதே மாதிரி இவருடன் போட்டி போட்ட அனைவரையும் தோற்கடித்து முன்னுக்கு வந்திருக்கிறார்.

அப்பா பட்ட அவமானத்தை துடைத்த பெண்மணி

அப்பொழுது இவருக்கும் முதல்முறையாக வந்த ஒரு பெண்மணிக்கும் துப்பாக்கி போட்டி நடைபெற்றிருக்கிறது. அந்த பெண்மணியைப் பார்த்து எஸ்பி கலியமூர்த்தி ரொம்பவே அசால்ட் ஆக பெண்மணிதானே என்று டாஸ்க் எல்லாம் வேண்டாம் நேரடியாக துப்பாக்கி சுடுதல் பண்ணிடலாம் என்று சொல்லி இருக்கிறார். அப்பொழுது SP கலியமூர்த்தி குறி வைத்து துப்பாக்கி சுட்டதை விட துல்லியமாக அந்த பெண்மணி சுட்டு இருக்கிறார்.

இதனால் டையில் இந்த போட்டி முடிந்து விட்டது. பிறகு மறுபடியும் 10 கவுன்டுக்கு அதிகரித்து துப்பாக்கி சுடுதல் ஆரம்பித்திருக்கிறது. அப்பொழுது SP டாஸ்க் வச்சுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த பெண்மணி உங்களுக்கு திறமை இருந்தால் அதன் அடிப்படையில் வாங்க. இது ஒன்றும் சீட்டு குலுக்கி போட்டு விளையாடுற விஷயம் கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.

அப்படி இருவருக்கும் நடந்த போட்டியில் Sp கலியமூர்த்தியை விட அந்தப் பெண் கனக்கச்சிதமாக துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்றிருக்கிறார். இதை பார்த்து எஸ்பி துப்பாக்கியை கீழே போட்டு அமைதியாக போயிருக்கிறார். அந்த நேரத்தில் அந்தப் பெண்மணி அந்த துப்பாக்கியை எடுத்து துடைத்து எஸ்பி கையில் கொடுத்து சல்யூட் பண்ணி இருக்கிறார்.

அதற்கு Sp அந்த பெண்ணுக்கு சல்யூட் அடித்து நான் தான் தோற்றுப் போய் நிற்கிறேன். அதனால் நான்தான் உனக்கு சல்யூட் அடிக்கணும். நீ ஏன் எனக்கு அடிக்கிறாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண்மணி திரு கலியமூர்த்தி அவர்களே என்னிடம் தோற்றுப் போனதற்கு நீங்கள் துளி கூட வருத்தப்படக்கூடாது. ஏனென்றால் உங்களிடம் மூன்று முறை தங்கப் பதக்கத்தை பறிகொடுத்த அச்சுதன் நாயரின் மகள் நான் என்று சொல்லி அசத்தியிருக்கிறார்.

இதனால் ஒருவருடைய வாழ்க்கையிலும் தோல்வியிலிருந்து தான் நாம் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி நமக்கு வந்து அகங்காரத்தை உண்டாக்கினால் அடியோடு அடிபட்டு போய்விடுவோம். அதாவது ஜெயிக்கிற வரை குதிரை வேகத்தில் ஓடணும். ஜெயித்த பின்பு குதிரையை விட டபுள் மடங்கு ஓடணும். அப்பதான் நம்மளுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தோல்வியிலிருந்து பாடத்தை கற்று இருப்பதாக எஸ்பி தன்னம்பிக்கையான பேச்சுடன் பேட்டி அளித்திருக்கிறார்.

Next Story

- Advertisement -