வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வெற்றியை ருசிக்க போராடும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா.. மகராஜா பாணியில் வெளியான டீசர்

Keerthy Suresh in Revolver Rita Teaser: ஹீரோயினாக அறிமுகமான ஒரு சில படங்களிலேயே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு என்று ஒரு தனி இடத்தை தக்க வைத்தார். ஆனால் அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தட்டு தடுமாறி பல தோல்விகளை கொடுத்த நிலையில் இவருக்கு அப்புறம் வந்த நடிகைகள் அனைவரும் தொடர் வெற்றிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் கீர்த்தி சுரேஷ் பெண்கள் ரீதியான படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகியாக மட்டும் கமிட் ஆகி ஒரு சில படங்களில் நடித்த வருகிறார். அப்படி சமீபத்தில் வெளிவந்த படம் தான் ரகு தாத்தா. ஆனால் இந்த படமும் சொல்லிக்கிற அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதனால் எப்படியாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் விடாமுயற்சியுடன் நடித்த வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை தி ரூட் மற்றும் தி பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். மேலும் சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜேகே சந்துரு எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் 32 வது பிறந்த நாளுக்கு டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதில் கையில் ஹேண்ட்பேக்கை வைத்துக்கொண்டு போகும் பொழுது அந்த பேக்கை திருடிட்டு போன ரவுடி கும்பல் பணம் இருக்கிறதா என்று செக் பண்ணி பார்க்கிறார்கள். ஆனால் அப்படி பார்க்கும் பொழுது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக துப்பாக்கி, வெடிகுண்டு, ரத்தம் வடிந்த கத்தி போன்ற பொருள்கள் இருப்பதால் பயத்துடன் பார்க்கிறார்கள்.

அப்பொழுது கீர்த்தி சுரேஷ் மாஸாக என்டரி கொடுத்து அதெல்லாம் வாங்கி ஒரு பிளாஷ்பேக் காட்சிகள் போகிறது. அதில் பார்க்கும் பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா படத்தின் கதை போல் ஒரு அழகான கூட்டு குடும்பத்தில் ஏற்பட்ட சில சங்கடங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆக்ஷன் காட்சிகளுடன் கீர்த்தி சுரேஷ் களம் இறங்கியது போல் தெரிகிறது.

இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ராதிகா சரத்குமார், மைம் கோபி, சென்ட்ராயன் மற்றும் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல் மற்றும் ஸ்டண்ட் நடன இயக்குனர் திலிப் சுப்பராயன் ஆகியோர் உள்ளனர். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கீர்த்தி சுரேஷ்க்கு இப்படமாவது வெற்றி கொடுக்குமா என்பதை கொஞ்சம் பொறுத்து இருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News