டோரா கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.

அதன் காரணமாக படவாய்ப்புகள் கையை விட்டுப் போவதை அறிந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு நாளைக்கு மூன்றுக்கு நான்கு வேளையாக சாப்பிட்டு உடல் எடையை கூட்டுதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் மாடர்ன் உடைகளில் தினமும் ஏதாவது ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அந்த வகையில் கார்ட்டூன் டோரா கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.

keerthy-suresh-dora-getup
keerthy-suresh-dora-getup
- Advertisement -