கீர்த்தி சுரேஷை நீச்சல் உடையில் பார்க்க ஆசைப்பட்ட இயக்குனர்.. உஷாரான அம்மணி

மலையாள வரவான தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்(keerthi suresh). ஆனால் தற்போது தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

மாறாக தெலுங்கு சினிமாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக மகேஷ் பாபுவுடன் நடிக்கும் படம் ஒன்றை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் அவர் உடல் எடையை குறைத்ததுதான் என தமிழ்நாட்டு ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்களுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கொஞ்சம் கொழுக்மொழுக் என அழகாக இருந்த கீர்த்தி சுரேஷ், யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை மொத்தமாக குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. உடலை குறைக்க சொன்ன நபரைத்தான் தமிழ் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அதே சமயத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் பாலிவுட் சினிமாவில் இருந்து ஒரு பட வாய்ப்பு வந்துள்ளது. அஜய் தேவ்கன் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் ஒருவர் வந்துள்ளார். முதலில் பாலிவுட் என்றதும் பல்லை காட்டிய கீர்த்தி சுரேஷ் பிறகு இயக்குனர் சொன்னதை கேட்டு கடுப்பாகி விட்டாராம்.

படவாய்ப்பு சம்பளம் அனைத்தையும் பேசிய பிறகு நீச்சல் உடையில் வரவேண்டுமென தெரிவித்துள்ளார் இயக்குநர். பாலிவுட் சென்று நீச்சல் உடையில் நடித்த நடிகைகளின் கதி என்ன ஆனது என்று அவருக்குத் தெரியாதா என்ன. இதனால் உஷாராக அந்த படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

- Advertisement -