எனக்கு கல்யாணம் ஆகல, ஆனா மூன்று வயதில் பையன் இருக்கான்.. ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ரஜினி முருகன்தான்.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நடித்த ரெமோ திரைப்படம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை தேவதை ரேஞ்சுக்கு கொண்டாடும் அளவுக்கு உச்சத்தை தொட்டார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்ததால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் முன்னர் கிடைத்த வரவேற்பு இப்போது இல்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிபட்டா என்ற படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களாக இசையமைப்பாளர் அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் திடீரென தனக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான் என அவர் பதிவிட்ட பதிவு ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

அதாவது கீர்த்தி சுரேஷ் வாங்கிய நாய்க்குட்டிக்கு மூன்று வயது ஆகிறது என்பதை தான் தன்னுடைய மகனுக்கு மூன்று வயதாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த நடிகைகள் செல்லப்பிராணிகளை வைத்து பண்ணும் அலப்பறை தாங்க முடியவில்லை என்ற கருத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.

keerthi-suresh-cinemapettai-01
keerthi-suresh-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்