துள்ளி குதித்து சர்வமும் அடங்கிப்போன காவ்யா கலாநிதி.. ஐபிஎல் இல் நமத்து போன பட்டாசுக்கு 35 கோடிகள்

IPL 2024 shocking lose by SRH: நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், எங்கேயோ இருந்த போட்டியை தன் வசமாக்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஒரு கட்டத்தில் எளிதாக கே கே ஆர் வென்று விடும் என ரசிகர்கள் மைதானத்தை விட்டு கிளம்பினார்கள்.

விறுவிறுப்பாக நடந்த நேற்றைய போட்டியில் 208 என்ற இமாலய இலக்கை துரத்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த அணியின் ஓனர்களாகிய கலாநிதி மற்றும் காவ்யா கலாநிதி இருவரும் ஆட்டத்தை பார்க்க வந்தனர். தங்கள் அணியினரை ஊக்குவிக்கும் விதமாக எஸ் ஆர் எச் ஜெர்சியில் வந்து அசத்தினார்கள்.

கிரிக்கெட்டின் சொர்க்க பூமி ஆகிய கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் 18 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இமாலய இலக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு தேவைப்பட்டது.

ஐபிஎல் இல் நமத்து போன பட்டாசுக்கு 35 கோடிகள்

போட்டியை விட்டுக் கொடுக்காமல் ஆடிய ஹென்ரிச் கிளாசன் அதிரடி காட்ட, கே கே ஆர் அணிக்கு தோல்வி பயம் தொற்றிக் கொண்டது. 29 பந்துகளுக்கு 63 ரன்கள் அடித்து கிளாசன் சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

சிக்ஸர்களை அடித்து வான வேடிக்கை காட்டிய கிளாசனை ஊக்குவிக்கும் விதமாக காவ்யா மற்றும் கலாநிதி இருவரும் துள்ளிக்குதித்து தங்களது கரகோஷத்தை எழுப்பினார்கள். ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் 27 ரன்கள் அடித்து மிச்சல் ஸ்டார்க்கை நமத்து போன பட்டாசா ஆக்கினார் கிளாசன்.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாய் ஆட்டம் கண்டது எஸ் ஆர் எச் அணி . வரிசையாக கிளாசன், சபாஷ் அகமது என எல்லோரும் அவுட் ஆகவே 4 ரண்களில் போட்டியை கோட்டை விட்டது சன்ரைசஸ். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத வீரராக 35 கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டவர் மிக்செல் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்