ஓவர் அலப்பறையால் பெயரை கெடுத்துக் கொள்ளும் கவின்.. லெவல் தெரியாமல் அடிக்கும் கூத்து

Kavin: சினிமாவில் திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைத்துவிடும் என்பதற்கு உதாரணமாக எத்தனையோ பேரை சொல்லலாம். அதே மாதிரி சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு திறமையின் மூலம் ஹீரோவாக பயணித்து வந்தவர் தான் நடிகர் கவின்.

ஆரம்பத்தில் பெருசா வாய்ப்பு இல்லை என்றாலும் பிக் பாஸ் போன பிறகு இவருக்கு கிடைத்த மக்களின் ஆதரவுடன் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தற்போது தவிர்க்க முடியாத இளம் ஹீரோவாகவும் ஜொலித்து வருகிறார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஸ்டார் மற்றும் கிஸ் என்ற இரண்டு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதற்கு இடையில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டு விட்டார்.

ஓவர் ஆட்டம் போடும் கவின்

அதனால் என்னமோ தற்போது சினிமாவில் இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. அதாவது கமிட் ஆகிய படங்களில் ஷூட்டிங்காக போனால் இவர் இஷ்டத்துக்கு தான் நடந்து கொள்கிறாராம். அதாவது லேட்டா படப்பிடிப்புக்கு போயிட்டு சீக்கிரமாகவே பேக்கப் பண்ணி வீட்டுக்கு போய் விடுகிறாராம்.

இதனால் இவரை வைத்து எப்படி படத்தை உருப்படியாக எடுத்து முடிக்க முடியும் என்று பட குழுவில் உள்ளவர்கள் புலம்பிக் கொண்டு வருகிறார்கள். போதாக்குறைக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என்று டிமான்ட் பண்ணி வருகிறார்.

இவர் நடித்தால் அந்த படம் நஷ்டம் ஏற்படாத வகையில் வெற்றி பெற்று விடும் என்ற லெவலில் தான் கவின் மார்க்கெட் தற்போது இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு ரெண்டு கோடி வேணும், 3 கோடி சம்பளம் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார்.

ஏற்கனவே இவரை வைத்து கமிட் பண்ணிய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் எப்படி தான் படத்தை முடிப்பது என்று தள்ளாடி வருகிறார்கள். இது தெரியாமல் ஓவர் அலப்பறையை கூட்டி சம்பளத்தை டிமாண்ட் பண்ணி கேட்பது எங்கே போய் முடியப் போகிறதோ.

இப்படித்தான் சிம்புவும் படப்பிடிப்புக்கு சரியா வராமல் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டார். அதனால் தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் துவண்டு போய் இருக்கிறார். கவினும் இதே மாதிரி பண்ணிக் கொண்டு வந்தால் சிம்பு லிஸ்டில் சேர்ந்து விடுவார்.

சிம்புக்கு கல்யாணம் ஆகாமல் கெட்ட நேரம் அவரை வாட்டி வதைக்கிறது. ஆனால் கவினுக்கு கல்யாணம் ஆகி புது மாப்பிள்ளையாக இருப்பதனால் ஓவராக கூத்தடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்