அடுத்த கட்டம் வளர்ந்ததால் பந்தா காட்டும் கவின்.. அப்புறம் என்ன நேரா விஜய்க்கு தான் போட்டி

Actor Kavin: கவினின் வளர்ச்சி தற்போது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. சீரியல், பிக்பாஸ் மூலம் இவருக்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அதையடுத்து ஒரு சில படங்களில் தலை காட்டி வந்த இவருக்கு லிப்ட், டாடா மிகப்பெரும் அடையாளமாக மாறியது. இப்படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போது இவர் பிஸியான ஹீரோவாக மாறியுள்ளார்.

தற்போது இவர் நடித்து முடித்துள்ள ஸ்டார் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே போல் கிஸ் என்ற படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஓவர் பந்தா காட்டும் கவின்

அது மட்டுமின்றி இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார். அதனாலேயே இப்போது இவர் கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டி வருகிறாராம்.

அதாவது சூட்டிங் ஸ்பாட்டுக்கு இவர் லேட்டாக வருவதாக ஒரு புகார் எழுந்துள்ளது. மேலும் படம் சம்பந்தப்பட்ட ப்ரமோஷனுக்கு கூட தாமதமாகத்தான் வருகிறாராம்.

ஏற்கனவே திருமணத்திற்கு பிறகு கவின் ஆளே மாறிவிட்டார் என்ற பேச்சு இருக்கிறது. நண்பர்களை கூட தவிர்ப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. அத்துடன் இந்த புகாரும் சேர்ந்துள்ளது.

இப்படியே சென்றால் இது அவருடைய சினிமா வாழ்வுக்கு நல்லதே கிடையாது. வளர்ந்து வரும் நடிகர்கள் ஓவர் பந்தா காட்டினால் காணாமல் போய்விடுவார்கள்.

கவின் அதை புரிந்து கொள்வது நல்லது. ஏனென்றால் அடுத்த சிவகார்த்திகேயன், விஜய் என இவருக்கான அலப்பறை அதிகமாக இருக்கிறது. அதனால் கூட கவின் தலையில் கொம்பு முளைத்து விட்டதோ என்னவோ.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்