3வது படத்திலேயே எகிறிய கவின் மார்க்கெட்.. விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய ஹீரோ

டாடா வெற்றிக்கு பிறகு கவினின் வளர்ச்சி சினிமாவில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இவர் சம்பளத்தையும் ஒன்றரை கோடி வரை உயர்த்தியுள்ளார். இந்த படத்தை முதன் முதலில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குகிறார். இந்த படத்திற்கு முதலில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்த பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் இப்போது கவினுக்கு மிகவும் பிடித்த விஜய் பட நடிகையுடன் இணைந்து நடிக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் சதீஷ் அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய படத்திற்கு எந்தவித மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்துள்ளார்.

Also Read: ஹீரோவை விட இசையமைப்பாளருக்கு 3 மடங்கு சம்பளம் அதிகம்.. தனுசுக்கே நோ ஆனா கவினுக்கு ஓகே

அனிருத்தின் இசை கவினின் சினிமா வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கேற்க கூடும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்களில் இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத், கவினே நினைத்தாலும் அவருடைய படத்தில் இசையமைக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்.

அப்படி இருக்கையில் தனது மூன்றாவது படத்திலேயே அனிருத் இசையமைப்பது உண்மையிலேயே கவினுக்கு சாதகமான செயல். இந்த படத்தில் இவருக்கு யார் ஜோடியாக நடிப்பார் என யோசித்து நிலையில் அதுவும் கவினுக்கு சாதகமாக மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார்.

Also Read: தொடர்ந்து வெற்றி படத்தால் சம்பளத்தை அதிகரித்த கவின்.. இதுவரை சம்பளத்தை உயர்த்தாத வாரிசு நடிகர்

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மோகனன், அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த பின்பு, தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது அடுத்ததாக கவினுக்கு ஜோடியாகவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சேர்ந்திருக்கும் முக்கிய பிரபலங்கள் மூலம் கவினை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மை.

Also Read: டாடா படத்தால் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கவின்.. டான்ஸ் மாஸ்டருடன் இணையும் கூட்டணி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்