கவின் முக்கியமல்ல, தனுஷ் தான் முக்கியம்.. சுயநலமாக பேசிய அப்பாவை லாக் செய்த அனிருத் 

தமிழ் சினிமாவில் தற்போது மிக முக்கிய இசையமைப்பாளர் அனிருத். அனைத்து உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கும் இவர்தான் இசையமைத்து வருகிறார். சில டாப் ஹீரோக்களின் படங்களை கூட வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பயங்கர பிசியாக இருக்கிறார். எடுத்துக்காட்டாக தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் திடீரென டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு எப்படி இவர் இசையமைக்கிறார் என்று பலரும் வியந்து பார்க்கின்றனர்.

Also Read: நீங்க பத்து தலையா இருக்கலாம் ஆனா நான் ஒரே தல தான்.. இளையராஜா, ஏஆர் ரகுமானுக்கு வைக்கும் செக்

இதை கேள்விப்பட்ட அனிருத் அப்பாவும் ஆச்சரியத்தில், ‘எதுக்குடா இந்த படத்திற்கு போய் இசையமைக்கிற, உனக்கு நிறைய படங்கள் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இது நட்பிற்காக செய்யும் கைமாறு. அதாவது
சதீஷ் எப்படி அனிருத்துக்கு பழக்கம் என்றால், அனிருத் இசையமைக்கும் விளம்பர படங்கள் மற்றும் அவர் தற்போது வெளிநாடுகளில் நடத்தப்படும் இசை விழா அனைத்திற்கும் சதீஷ் தான் டான்ஸ் மாஸ்டர். அப்படிதான் இவர்களுக்கிடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்போது சதீஷ் இயக்குனராக அறிமுகமாக படத்தில், நண்பராக நான் என்னுடைய பங்கை அளிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த படத்திற்காக இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளேன் என்று அனிருத் தன்னுடைய அப்பாவை சமாளித்து இருக்கிறார். இருப்பினும் தனுஷ் தான் முக்கியம் கவின் முக்கியமல்ல என்று சுயநலமாக பேசிய தன்னுடைய அப்பாவை, இந்த படத்தில் கவினுக்கு அப்பாவாக அனிருத் நடிக்க வைத்து அவரை பேச விடாமல் லாக் செய்துவிட்டார்.

Also Read: ஹீரோவை விட இசையமைப்பாளருக்கு 3 மடங்கு சம்பளம் அதிகம்.. தனுசுக்கே நோ ஆனா கவினுக்கு ஓகே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா உடைய சகோதரர் தான் அனிருத்தின் தந்தை  நடிகர் ரவி ராகவேந்திரா. இவர் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில்  குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார். படங்களில் மட்டுமல்ல முக்கிய சீரியல்களிலும் ரவி ராகவேந்திரா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும்  படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சுயநலமாக இந்த படத்தை இசையமைக்க கூடாது என அனிருத்தை சொன்னதால் அவரை லாக் செய்வதற்காகவே இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கின்றனர்.

Also Read: திருப்தி அடையாத ரஜினிகாந்த்.. ஆழம் தெரியாமல் பாதாளத்தில் இறக்கி விட்ட அனிருத்

- Advertisement -