நயன்தாரா படத்தில் ஹீரோவாக நடிக்கும் கவின்.. லிப்ட் பட வெற்றியால் அடித்த ஜாக்பாட்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து படங்களையும் தயாரித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் படத்தை இவர்களின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து  கூழாங்கல் மற்றும் ராக்கி உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை லலித்குமாருடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடுத்த படத்தை தயாரிப்பதற்காக கதை கேட்டு வந்துள்ளனர். அதன்படி அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

kavin-cinemapettai
kavin-cinemapettai

இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. கவின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான லிப்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கவினின் அடுத்த படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது கவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்