இப்போதைக்கு படம் ரிலீஸ் ஆகாது.. வெப் சீரியலில் களமிறங்கிய பிக் பாஸ் கவின்!

தமிழில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தலைகாட்டி இருந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் வேட்டையன் கதாபாத்திரம் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஆரம்பத்தில் சக போட்டியாளர்களுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும், இறுதியில் நண்பர்களுக்காக விட்டுக்கொடுத்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். அந்த ஆண்டு மோஸ்ட் டிரண்டிங் செலிபிரிட்டியாக வலம் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லிப்ட் என்ற படத்தில் கவின் நடித்து வந்தார்.

இதில் பிகில் பட நடிகை அமிர்தா ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. தற்போது ஃபோஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தபடியாக வெப்சீரிஸ் ஒன்றில் கவின் நடிக்க உள்ளாராம். இதற்கு ஆகாசவானி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வெப்சீரிஸ் பற்றிய மற்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. எனினும் வெப்சீரிஸின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கவின் நடிப்பது மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.

இதுவரை நெல்சன் இயக்கிய அனைத்து படங்களிலும் கவின் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி உள்ளார். பீஸ்ட் படத்திலும் பணியாற்றி வருகிறார். பீஸ்ட் படத்தின் வேலைகள் விரைவில் நிறைவடைய உள்ளதாம். மேலும் லிஃப்ட் படமும் ரிலீசுக்கு தயாராகி விடுமாம்.

இந்த இரண்டு படங்களின் வேலைகள் நிறைவடைந்ததும் வெப்சீரிஸில் கவின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

kavin
kavin

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -