வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தொடர்ந்து வெற்றி படத்தால் சம்பளத்தை அதிகரித்த கவின்.. இதுவரை சம்பளத்தை உயர்த்தாத வாரிசு நடிகர்

கவின் சின்னத்திரை சீரியலில் நடித்து மிகவும் பரிச்சயமான ஒரு நடிகர். பின்பு அதற்கு அடுத்த கட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் மிகவும் பிரபலமானார். இவருக்கு அதன் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். ஆனால் அதில் தொடர்ந்து பங்கேற முடியாமல் சில பிரச்சினைகளால் வெளிவந்தார். அதோடு மிகவும் தளர்ந்து போகாமல் முயற்சி செய்து படங்களில் நடிக்க வந்தார்.

அப்படி ஹீரோவாக நடித்த முதல் படம் தான் நட்புனா என்னன்னு தெரியுமா. இதனைத் தொடர்ந்து லிஃப்ட் மற்றும் சமீபத்தில் வெளிவந்த டாடா இந்த இரண்டு படங்களுமே இவருக்கு பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதனால் இவர் வளர்ந்து வரும் ஹீரோவாக மாறிக்கொண்டே வருகிறார். அடுத்து யார் இயக்கத்தில் படம் பண்ணப் போகிறார் என்று தெரியவில்லை.

Also read: டாடா படத்தால் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கவின்.. டான்ஸ் மாஸ்டருடன் இணையும் கூட்டணி

ஆனால் இவரின் சம்பளத்தை தற்போது படத்தின் வெற்றிக்கு ஏற்ப கூட்டிக் கொண்டே வருகிறார். அது எவ்வளவு என்றால் ஒன்றரை கோடியாக உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு பக்கம் இப்படி சம்பளத்தை அதிகரித்து வருகிறார். ஆனால் இவருக்கு எதிர்மறையாக அருள்நிதி ஆரம்ப காலத்தில் படங்களில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினாரோ அதே சம்பளத்தை இப்ப வரை வாங்கிக் கொண்டு வருகிறார்.

இதுவரை அருள்நிதி பல படங்களில் நடித்து பெரிய வெற்றியும் இல்லாமல் மோசமான தோல்வியும் இல்லாமல் நடுநிலையாக நடித்து வருகிறார். இன்னும் இவரிடம் கைவசம் நான்கு படங்கள் வெளியாக இருக்கிறது. ஆனால் இவரது சம்பளம் அன்றிலிருந்து இன்று வரை 75 லட்சம் மட்டுமே வாங்கி வருகிறார். இவருடைய சம்பளத்தை இவர் உயர்த்தவே இல்லை.

Also read: இறந்து போன நண்பனுக்கு சமர்ப்பணம்.. மேடையில் கண்கலங்கிய கவின்

ஆனால் இவர் நினைத்தால் எப்படி வேணாலும் சம்பளத்தை உயர்த்தி கேட்கலாம். ஆனால் இவர் அந்த மாதிரி செய்யாமல் இவருக்கு கொடுத்த கதையை மட்டும் அழகாக நடித்து கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். அது போல இவருக்கு கொடுத்த சம்பளத்தை எந்தவித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொள்கிறாராம்.

ஆனால் இவர் இதுவரை 15 படங்களுக்கு மேல் நடித்து இதற்கு போக இன்னும் நான்கு படங்களை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் இவருக்கு கொடுத்த சம்பளத்தை வாங்கிட்டு போகிறார். ஆனால் இதுவரை மூன்று படங்களில் மட்டுமே நடித்த கவின், தொடர்ந்து வெற்றிப்படத்தை கொடுத்ததற்காக சம்பளத்தை அதிகரித்து விட்டார். இதை தான் சொல்லுவாங்க காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று. இதற்கு உதாரணமாக கவின் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருகிறார்.

Also read: 2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

- Advertisement -

Trending News