திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

உண்மையாகவே பிச்சை எடுத்த கவின்.. இப்படி ஒரு நிலையா என்று பரிதாபபட்ட மக்கள்

கவின் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம், ப்ளடி பெக்கர். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கு என்றே கூறலாம். இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய, சிவபாலன் முத்துக்குமார் இயக்குனராக அவதாரம் எடுத்து, கவின் நடிப்பில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

நெல்சன் துவங்கிய தயாரிப்பு நிறுவனமான பிலமென்ட் பிச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் சிவபாலன். அது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிச்சை எடுத்த கவின்..

அவர் கூறியதாவது, ” இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. ஒரு யூஷுவலான் டெம்ப்லேட்டில் படம் இருக்காது. முதலில் நான் இந்த கதையை வேறு சில நடிகர்களை நினைத்து தான் எழுதினேன். ஆனால் அவர்களெல்லாம் நடிப்பார்களா என்ற கேள்வி எனக்குள் வந்தது.”

“கவினிடம் இந்த கதையை சும்மா சொல்லி பார்த்தேன். அவருக்கு உடனே இந்த கதை பிடித்து ஓகே என்று சொல்லி விட்டார். மேலும் அவர் பல முறை கதையை கேட்டு தெரிந்து அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.”

“மேலும் கவினுக்கு பல பிச்சைக்காரர்கள் கெட்டப் போட்டு பார்த்தோம். தற்போதுள்ள, இந்த கெட்டப் தான் அவருக்கு செட் ஆனது. மேலும் பொதுமக்கள் மத்தியில், அவர் இந்த கெட்டப்பில் சுற்றி திரிந்தார். யாருக்கும், ஒரு துளி கூட சந்தேகமே வரவில்லை. அக்மார்க் பிச்சைக்காரனாகவே அவர் மாறிவிட்டார்.”

இதை கேட்ட ரசிகர்கள், கவினுக்கு இருக்கும் இந்த டெடிகேஷன் அவரை எங்கோ கொண்டு சென்று விடும் என்று பயங்கரமாக பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Trending News