திருமணத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த கத்ரீனா கைஃப்.. ஒருநாள் வாடகை மட்டும் இத்தனை லட்சமா ?

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். அண்மையில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர். இருவரின் திருமணமும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் நடிகை கத்ரீனா கைஃப். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர்களுடன் ஜோடியாகப் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ராஜஸ்தானில் ராஜா வீட்டுத் திருமணம் போல 700 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமாக கோட்டையில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷலின் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சமாம். ஆனால் இவர்களது திருமணத்தை பிரமாண்டமாக குஜராத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்த திருமணத்தில் சில முன்னணி நடிகர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், உச்சகட்ட பாதுகாப்புடனும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதானல் பாலிவுட் பிரபலங்கள் 120க்கும் மேற்பட்டோர் மட்டும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் யாரும் மொபைல் போன், கேமரா உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. திருமணத்திற்கு பத்திரிக்கையாளர்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கத்ரீனா தனது திருமணத்திற்கு பிறகு தானே திருமண புகைப்படங்களை வெளியிட்டார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை