சூர்யாவை விட அதிக அளவு படங்களில் கமிட் ஆகியுள்ள கார்த்திக்.. வளைத்து போட்ட 7 இயக்குனர்கள்

நடிகர் கார்த்தி தற்போது வரை 24 படங்கள் வரை தமிழில் நடித்த நிலையில், இவரின் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் கடந்தாண்டு கார்த்தி வந்தியதேவனாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இந்திய அளவில் ரசிகர்களை கவர்த்திருப்பார். இதனிடையே கார்த்தி கிட்டத்தட்ட 7 இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

மணிரத்னம்: மணிரத்னம் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசானது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல பட்டாளங்கள் நடித்தனர். இதில் கார்த்தியின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்ட நிலையில், மீண்டும் திரையில் இக்கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Also Read:

ராஜு முருகன்: கார்த்தியின் 25 வது படமாக உருவாகி வரும் ஜப்பான் படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், தங்க நிற உடையில், கையில் உலக உருண்டையுடன், பெண்கள் சூழ கார்த்தியின் புண் சிரிப்புடன் அட்டகாசமாக வெளியானது. இப்படத்தில் கார்த்தி தன் எதார்த்தமான நடிப்பில் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ்: கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தமில்லாமல் ரிலீசாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் தான் கைதி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கார்த்தியின் அசத்தலான நடிப்பு பேசப்பட்டது. கடந்தாண்டு ரிலீசான உலகநாயகனின் விக்ரம் படத்திலும், கைதி படத்தின் தொடர் கதையை கொண்டு இயக்கப்பட்டது. இந்நிலையில் கைதி 2 படம் கட்டாயம் இயக்கப்பட உள்ள நிலையில், கார்த்தி, லோகேஷ் கனகராஜ் காம்போவை மீண்டும் திரையில் பார்க்க இந்திய சினிமாவே காத்துக்கொண்டிருக்கிறது.

பி.எஸ்.மித்ரன் : கடந்தாண்டு கார்த்தி அப்பா, மகன் என முதன்முறையாக இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தண்ணீரை வைத்து எப்படியெல்லாம் வியாபாரமும், அரசியலும் உலகில் நடைபெறுகிறது என்பதை இப்படத்தில் சர்தாராக வலம் வரும் கார்த்தி நடித்து அசத்தியிருப்பார். இதனிடையே இப்படத்தின் பாகம் 2 படப்பிடிப்பு அடுத்தாண்டுக்குள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read:

நலன் குமாரசாமி: விஜய்சேதுபதியின் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி முதன்முறையாக கார்த்தியுடன் இணைய உள்ளார். நலன் குமாரசாமியின் திரைப்படத்தில் எதார்த்தமான காமெடி, காதல் காட்சிகள் அதிகம் இடம்பெறும். இந்நிலையில் கார்த்தி, நலன் குமாரசாமி காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

பிரேம்குமார்: இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு திரையில் வெளியான 96 படத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஒரு முத்த காட்சிகள் கூட இல்லாமல், காமம் இல்லாத பள்ளிப் பருவ முதல் காதலை, காதலுடனும், கவிதையுடனும் இப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். இப்படத்தை தெலுங்கில் ஜானு டைட்டிலில் சமந்தாவின் நடிப்பில் இயக்கி அங்கும் ஹிட் கொடுத்தார். இதனிடையே கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் படத்தின் ஷூட்டிங்கிற்கு பின் அவரது நடிப்பில் புதிய படம் உருவாக உள்ளது.

சதிஷ் செல்வகுமார்: 2021 ஆம்ஆண்டு நடிகர் ஜி,வி பிரகாஷ், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தை இயக்கியது மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பேச்சிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரி மாதமே கார்த்தி, சமந்தா நடிப்பில் புதிய படம் எடுக்க சதிஷ் செல்வகுமார் ஆயத்தமானார். ஆனால் கார்த்தியிடம் கால்ஷீட் இல்லாததால் இப்படம் தாமதமாகி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Also Read:

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்