பைத்தியக்காரத்தனமாக செயல்படும் கார்த்திக் சுப்புராஜ்.. இது என்னடா புது டிரெண்டா இருக்கு

தமிழ் சினிமாவில் பீட்சா, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்களின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்த கார்த்திக் சுப்பராஜ் சமீப காலமாக எதிர்பார்த்த அளவு வெற்றி படங்களை கொடுத்த தவறி வருகிறார். இவரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

அதைத் தொடர்ந்து விக்ரமை வைத்து இவர் இயக்கிய மகான் திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. இந்த இரண்டு திரைப்படங்களும் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில்தான் வெளியானது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நல்ல வேளை இந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் மகான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் கடந்துவிட்டதையொட்டி நூறாவது நாள் விழா கொண்டாடியுள்ளார்.

இதை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு மட்டுமின்றி படத்தில் இடம்பெறாத வாணிபோஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். தற்போது இதை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் சுப்பராஜை பயங்கரமாக கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏனென்றால் இதுவரை தியேட்டரில் வெளியான திரைப்படத்துக்கு தான் நூறாவது நாள் விழா கொண்டாடி நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படத்திற்கு நூறாவது நாள் கொண்டாடிய முதல் நபர் இவராக மட்டும்தான் இருக்கும். இதைத்தான் தற்போது ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் ஓடிடி தளத்தில் வெளியான எந்த படமாக இருந்தாலும், அது எத்தனை வருடம் கழித்தாலும் அதே ஓடிடி தளத்தில் தான் இருக்கும். இதற்கு எதற்காக நூறாவது நாள் விழா கொண்டாடவேண்டும். இதே படம் 50 வருடம் ஆனாலும் அதே தளத்தில்தான் இருக்கும். அதற்காக 50வது வருட விழா கொண்டாடுவாரா, இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்