இலங்கை கடற்படையை அட்டூழியத்திற்கு ஆளான “மீண்டும்” படக்குழு.. ஒட்டுமொத்த டீமும் அரஸ்ட்

சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா இயக்கியுள்ள “மீண்டும்” படக்குழுவினர் இலங்கை கடற்படை அட்டூழியத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தை சரவணன் சுப்பையா என்பவர் இயக்கியிருந்தார்.

தற்போது இவர் பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்து வருகிறது. இந்த படத்தில் கதிரவன் என்பவர் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அனகா என்பவர் நடித்துள்ளார். இவர் சந்தானத்தின் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் நடித்திருந்தார். பேர் வச்சாலும் என்ற பாடலில் இவருடைய நடனம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்தின் படக்குழுவினர் கடல் பகுதியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு ஆளாகி உள்ளனர். படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கை கடற்படையால் அரஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

meendum
meendum

இப்படி பல்வேறு தடைகளை தாண்டி உருவாக்கியுள்ள மீண்டும் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பொதுவாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து அட்டூழியம் செய்து வரும் நிலையில் மீண்டும் படக்குழுவினரும் அவர்களது அட்டூழியத்திற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்