16 வயதில் தேசிய விருது, 21 வயதில் மரணம்.. மின்மினி பூச்சி போல் மறைந்த கார்த்திக் பட ஹீரோயின்

Actor Karthik: குறுகிய காலமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் தான் இந்த நடிகை. அழகும் திறமையும் கொண்ட இவர் 21 வயதிலேயே உயிரிழந்தது தான் சோகம். சிறுவயதில் இப்படி ஒரு முடிவு அவருக்கு வந்திருக்க வேண்டாம் என்று இப்போதும் கூட பலர் வருத்தப்படுவதுண்டு.

1971ல் கேரளாவில் பிறந்த இந்த நடிகை 14 வயதிலேயே தமிழ் ஷார்ட் பிலிம் ஒன்றில் நடித்து கவனம் பெற்றார். அதை அடுத்து தன்னுடைய 16 வது வயதில் மலையாளத்தில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

அதை தொடர்ந்து இவரை தேடி பல வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் தமிழில் அடுத்தடுத்த படங்களில் இவர் நடிக்க தொடங்கினார். அதில் கார்த்திக்குடன் இவர் இணைந்து நடித்த உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் படம் இவருக்கான அடையாளமாக மாறியது.

Also read: 25 படங்கள் நடித்தும் கார்த்திக்கு குறையாத குசும்பு.. கூடவே தொத்திக்கிட்ட அடைமொழி

அதில் வரும் வானம் இடி இடிக்க, என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட பாடல்கள் இப்போதும் பலரின் ஃபேவரைட் ஆக இருக்கிறது. இப்படி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நடிகை தான் மோனிஷா உன்னி.

மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர தொடங்கிய இவர் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்த இந்த சம்பவம் இப்போதும் கூட மலையாள சினிமாவுக்கு பேரிழப்பாக இருக்கிறது.

monisha-unni
monisha-unni

மிகப்பெரிய நடிகையாக உருவெடுப்பார் என்று எதிர்பார்த்த இந்த நட்சத்திரம் மின்மினி பூச்சி போல் மறைந்து விட்டது. அந்த வகையில் சில்க் ஸ்மிதா, சௌந்தர்யா, ஷோபா, திவ்யா பாரதி போன்ற நடிகைகளின் வரிசையில் இந்த மோனிஷாவின் மரணமும் மறக்க முடியாததாக இருக்கிறது.

Also read: பிரபு, கார்த்திக்கு போட்டியாய் களம் இறங்கிய 2 நடிகர்கள்.. வில்லனாக தெறிக்க விடும் இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்