பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, அதன் பிறகு வரிசையாக பல படங்களை நடித்து ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவரது நடிப்பில் இந்த ஆண்டில் இதுவரை எந்த படமும் ரிலீஸாகவில்லை.
இருப்பினும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கார்த்தியின் அடுத்தடுத்த மூன்று படங்கள் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இன்னிலையில் கார்த்தி தற்போது ஜோக்கர் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் பருத்தி வீரனாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கார்த்திக்கு, மாஸ்டர் படத்தில் பவனியாக மிரள விட்ட விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது. படத்திற்கு ‘ஜப்பான்’ என படக்குழு பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கார்த்தி-விஜய் சேதுபதி முதன்முதலாக இணைந்திருக்கும் இந்தப் புதிய காம்போ ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இவர் நடித்து முடித்திருக்கும் விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. முத்தையா இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடித்திருக்கிறார்
இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் அவருடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து இருக்கிறார். அந்த படமும் வருகின்ற செப்டம்பர் படம் ரிலீஸ் ஆகிறது.
மேலும் மித்ரன் இயக்கத்தில் போலிஸ் கெட்டப்பில் கார்த்தி நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஆன சர்தார் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாகியது. சர்தார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்திருக்கிறார். 16 வருடங்களுக்குப் பின்பு லைலா இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.