செல்வராகவனால் சினிமாவையே வெறுத்த கார்த்தி.. பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

செல்வராகவன் மற்றும் பாலா இருவரது படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலரும் சினிமாவை வெறுத்து விடுவார்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. அந்த அளவுக்கு இருவர் மீதும் பலருக்கும் நம்பிக்கை இல்லாமல் உள்ளது.

கார்த்தி செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தபோது இனிமேல் சினிமாவே வேண்டாம் என்கிற அளவுக்கு சினிமாவில் வெறுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாட ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில்கூட தமிழகம் முழுவதும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது.

பருத்தி வீரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த கார்த்தியின் இரண்டாவது படமாக வெளியானது ஆயிரத்தில் ஒருவன். ஆனால் இந்த படத்தில் ஒப்புக்கொண்ட பிறகு அவரால் வேறு எந்தப் படத்திற்கும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்குத் இழுத்தடித்தது. இதன் காரணமாகவே மூன்று வருடங்களுக்கு மேலாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை தவிர வேறு எந்த படத்திலும் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

14 வருடமாக சினிமாவில் இருந்தாலும் தற்போது வரை கார்த்தி வெறும் 22 படங்கள் மட்டுமே நடித்ததற்கு ஆயிரத்தில் ஒருவன் படமும் ஒரு காரணம் எனக் கூறுகின்றனர். செல்வராகவன் படத்தில் நடிக்கும் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது.

aayirathil-oruvan-cinemapettai
aayirathil-oruvan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்