ரோலக்ஸ் உடன் மோத போகும் டில்லி.. மேடையில் கைதி 2 பற்றி வாய் திறந்த கார்த்தி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளிவந்த விக்ரம் திரைப்படமும் வரலாறு காணாத அளவுக்கு வரவேற்பை பெற்றது.

இதனால் கைதி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் பயங்கர ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு பலனாக தற்போது கைதி 2 பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. கார்த்தி தற்போது விருமன் திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் பயங்கர பிசியாக இருக்கிறார்.

யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, பிரஸ்மீட் என்று அவர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். அதில் அவர் விருமன் திரைப்படம் குறித்து பல விஷயங்களை பேசினாலும் கைதி 2 படத்தின் அப்டேட்டை தான் பலரும் கேட்கின்றனர்.

அதற்கு தற்போது கார்த்தி பதில் அளித்துள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் கைதி 2 ஆரம்பிக்கப்படும் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கைதி 2 அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் ரோலக்ஸ் மற்றும் டில்லி இந்த படத்தில் மோதுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படத்தின் கடைசி சில நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். பலரையும் மிரட்டி எடுத்த அந்த கேரக்டர் எப்போது டில்லியுடன் மோதும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கைதி 2 வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்