சர்தார் படத்தின் கதையை உளறிய கார்த்தி.. போற போக்குல சிவகார்த்திகேயனை சீண்டி விட்ட சம்பவம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கார்த்தி தற்போது சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் ராசி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி ஒரு உளவாளியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடம் அவருடைய கதாபாத்திரத்திற்காக பல ஆராய்ச்சிகள் செய்து உருவாக்கி இருக்கின்றனர்.

Also read:கைதி படத்தினால் கார்த்திக்கு வந்த ஆப்பு.. குடும்பத்தில் குட்டைய கிளப்பிய மனைவி

அதனாலேயே இந்த படம் கார்த்திக்கு ரொம்பவும் ஸ்பெஷல் திரைப்படமாக இருக்கிறதாம். மேலும் ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையாக படு மிரட்டலாக இப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட முகம் சுளிக்க வைக்காத வகையில் மொத்த ஆடியன்சயும் செய்யும் கவர் செய்யும் படி இப்படம் உருவாகி இருக்கிறது என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் ட்ராவல் பண்ணும் வகையில் இருக்கும் என்றும் ஹீரோயின் ராசி கண்ணா இந்த படத்தில் வக்கீலாக நடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் அவர் வயதான தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.

Also read:என்னுடைய முதல் தீபாவளி ரிலீஸ்.. பிரின்ஸ் பட ட்ரைலரை அறிவித்த சிவகார்த்திகேயன்

அதை குறிப்பிட்டு பேசிய கார்த்தி அந்த கதாபாத்திரம் படத்தில் மிகப் பெரிய சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு படத்தின் மொத்த கதையையும் கார்த்தி கூறியதால் தற்போது இந்த படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும் அவர் அதே தினத்தில் வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆனால் அது வாழ்த்து போன்று இல்லாமல் சவால் விடும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த இரண்டு படங்களும் நேரடியாக மோத இருப்பது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் கார்த்தியின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

Also read:விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.? சிவகார்த்திகேயன் நீங்க இன்னும் வளரணும் தம்பி!