ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அமலாவை அடிக்கடி சந்தித்த சிவகுமாரின் வாரிசு.. அந்த வயசிலேயே இப்படி ஒரு க்ரேஸ்!

கிராமத்து கதாபாத்திரம் என்றால் பட்டையைக் கிளப்ப கூடியவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன், கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் விருமன் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கார்த்தி தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது தன் கல்லூரி படிக்கும் பொழுது நடிகர் சிவகுமாரின் மகன் நான் என்று தெரிந்த சீனியர்கள் என்னை ராகிங் செய்ய சொல்வார்கள்.

அதாவது சட்டை பட்டனை கழட்டி விட்ட தண்ணி தொட்டி தேடி வந்த பாடலுக்கு ஆடும் படி ராகிங் செய்வார்கள். எனது தந்தைக்கு டான்ஸ் ஆடவே வராது. ஆனால் அந்தப் பாடலில் ஏதோ டான்ஸ் ஆடி சமாளித்து இருப்பார். அதனை நான் வீட்டில் சொல்லி அடிக்கடி கிண்டல் செய்வேன் என கார்த்தி கூறியுள்ளார்.

மேலும் தனது அப்பாவுடன் நடித்த நடிகைகளையே தனக்கு அமலாவை ரொம்ப பிடிக்கும் என கார்த்தி தெரிவித்துள்ளார். நான் பள்ளி படிக்கும் போதிலிருந்தே அமலா மீது எனக்கு ஒரு க்ரேஸ் இருந்ததாக கூறி உள்ளார். மேலும் என் அம்மாவிற்கும் அமலாவை ரொம்ப பிடிக்கும் என கூறியிருந்தார்.

அமலா சென்னையில் ஒரு உணவகம் நடத்திக் கொண்டிருந்தார். நான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போது அமலாவை பார்க்கவேண்டும் என்ற சாக்கில் அடிக்கடி உணவு வாங்க அந்த உணவகத்திற்கு சென்று வருவேன். மேலும் சமீபத்தில் அமலாவை சந்தித்தபோது, நீ குழந்தையாக இருக்கும்போது இங்கே வருவாய் ஞாபகம் இருக்கா என்று அமலா கேட்கிறார்கள்.

ஆனால் நான் ஒன்றும் தெரியாதது போல் நின்றதாக கார்த்தி கூறியுள்ளார். மேலும் நான் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே என்னுடைய அம்மா எந்தப் பெண்ணையும் காதலிக்கக் கூடாது என கண்டிசன் போட்டிருந்தார் என்று கார்த்தி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

- Advertisement -

Trending News