சுல்தான் படத்தின் கதை இதுதானா? ஒரு வாரத்தில் ரிலீசை வச்சுகிட்டு உளறிய கார்த்தி

சுல்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் கதையை எதர்ச்சியாக கார்த்தி உளறி விட்டார் என்பதுதான் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தற்செயலாக நடந்த ஒன்று தான்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பெரிய திரைப்படம் என்றால் அது கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் சுல்தான் படம் தான்.

நீண்ட நாட்களாக சுல்தான் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. படம் வருமா, வராதா என்ற எந்த ஒரு சந்தேகமும் ரசிகர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு கண்டிப்பாக சுல்தான் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் படத்தை பார்த்து என்ஜாய் செய்யுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

rashmika-mandanna-at-sulthan
rashmika-mandanna-at-sulthan

இந்நிலையில் இன்று சத்யம் சினிமாஸில் சுல்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் ரஷ்மிகா மந்தனா அறிமுகமாக உள்ளார் என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பவரிடம் எதிர்பாராமல் ஒரு பொறுப்பு வருவதாகவும், அந்த பொறுப்பை எடுத்துக் கொள்வதும் எடுத்துக்கொள்ளாமல் போவதும் அவரது தனிப்பட்ட விருப்பம், ஆனால் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பிற்காலத்தில் அவன் வருத்தப்படுவான் என்பதை உணர்ந்து அந்த பொறுப்பை எடுத்துக் கொள்கிறான் என்பதுதானாம்.

மேலும் சண்டை பிடிக்காத ஒருவரிடம் எப்போதுமே அடிதடி என இருக்கும் ஒரு கூட்டத்தை கொடுத்து மேய்க்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்ற ஒரு வரி கதையே தன்னை மிகவும் இம்பிரஸ் செய்ததால் இந்த படத்தில் நடித்துள்ளேன் எனவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -