விருமனை வளவளனு இழுத்த முத்தையா.. தம்பி படத்திற்கும் நெருக்கடி கொடுத்த சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் முத்தையா. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார்.

சினிமாவை பொருத்தவரை இயக்குனர்கள் பலரும் நகர் புற வாழ்க்கையை எடுப்பதற்கு திட்டமிடுவார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் தான் கிராமத்து கதையை இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ப படங்கள் இயக்கி வருகின்றன. அப்படி கிராமத்து கதைகளை இயக்குவதில் வல்லமை படைத்தவர் முத்தையா.

முத்தையா படங்கள் அனைத்திலும் கிராமப்புற வாழ்க்கையும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பாசத்தையும் மையமாக வைத்தே இயக்குவார். அதனால் இவரது படங்கள் மீதான வரவேற்பும் அதிகரித்து தான் உள்ளது.

கொம்பன் படத்தின் மூலம் கார்த்தி கூட்டணி அமைத்து வெற்றி படத்தை கொடுத்த முத்தையா தற்போது மீண்டும் விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் நடித்து வருகிறார்.

இப்படத்தை 40 நாட்களில் முடிக்க முத்தையா திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது தீபாவளி நெருங்குவதால் விடுமுறை அளிக்கப்பட்டு பின்பு மீண்டும் 15 நாள் படப்பிடிப்பு நடக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக இன்னும் 15 நாள் செலவு வேற இருக்குதா என கவலையில் சூர்யா இருக்கிறாராம்.

viruman-adidi-karthik
viruman-adidi-karthik

மேலும் கார்த்தி சர்தார் படத்திற்காக தாடி வளர்த்து இருந்தார். ஆனால் தற்போது விருமன் படத்தில் நடிப்பதால் தாடி முழுவதுமே எடுத்துவிட்டு விருமன் பட கெட்டபிறகு மாற்றியுள்ளார். அதனால் விருமன் படத்தை முடித்தபிறகு அடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்