கையில் விலங்குடன் கத்தியை வைத்து கொலைவெறியுடன் முறைத்து பார்க்கும் தனுஷ்.. வைரலாகும் கர்ணன் போஸ்டர்

தனுஷ் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் வெளியாக உள்ளது.

முன்னதாக கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக கர்ணன் படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பே தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் டீசர் சீக்கிரம் வரும் என தெரிவித்திருந்தார். ஆனால் அறிவிப்பு வந்து வாரக்கணக்காகியும் நீண்ட நாட்களாக அறிவிப்பு வராததால் ரசிகர்கள் சோர்வுடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் மிரட்டலான போஸ்டருடன் கர்ணன் படத்தின் டீசர் வருகின்ற மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கர்ணன் படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை பெருமளவில் எதிர்பார்க்க வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

karnan-teaser-date-announcement-poster
karnan-teaser-date-announcement-poster

டீசர் வெளியீட்டு தேதி போஸ்டரிலேயே பல அசுரர்களுக்கு நடுவில் கையில் விலங்குடன் கத்தியை வைத்து கொலை வெறியுடன் பார்க்கும் போஸ்டர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வசூலை கர்ணன் படம் ஈட்டி கொடுக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -