லிவிங்ஸ்டன் நடிப்பில் 20 வருடத்திற்கு முன்னரே வந்த கர்ணன் படம்.. பஸ் ஸ்டாப் பிரச்சனைக்கு அப்பவே வைத்த முற்றுப்புள்ளி!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் குறிப்பிட வேண்டியவர் லிவிங்ஸ்டன். குணச்சித்திர நடிகராக சினிமாவில் நுழைந்து பின்னர் அனைவரும் கவனிக்கப்படும் நடிகராக வளர்ந்தார்.

ஹீரோவாகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் பல படங்களில் காமெடி நடிகராக வேண்டும், பழையபடி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கர்ணன் படத்தில் மிக முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது பஸ் ஸ்டாப் பஞ்சாயத்து தான்.

ஆனால் அதற்கான விடையை கடந்த 2001ஆம் ஆண்டு எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான என் புருஷன் குழந்தை மாதிரி என்ற படத்திலேயே கொடுத்து விட்டனர்.

என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் தேவயானியின் அறிமுக காட்சியில் வரும் பஸ் ஸ்டாப் பலகையில் மாங்குடி பேருந்து நிறுத்தம் என இருக்கும். அதற்கு கீழே பஸ் நிறுத்தாவிட்டால் நிறுத்தப்படும் என கோடிட்டுக் காட்டிருப்பார்கள்.

அதேபோன்று ஒரு பலகையை கர்ணன் படத்தில் பொடியன்குளம் பேருந்து நிறுத்தம் என வைத்துவிட்டு கீழே பஸ் நிறுத்தாவிட்டால் நிறுத்தப்படும் என வாசகம் எழுதியிருந்தால் தேவையில்லாமல் ஒரு ஊரே அடிபட்டு செத்திருக்காது.

karnan-problem-solution-given-by-en-purusan-kulandhaimari-movie
karnan-problem-solution-given-by-en-purusan-kulandhaimari-movie
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்