கர்ணன் படத்தில் காட்டுப்பேச்சி பாப்பாவாக நடித்த சிறுமி இவர்தான்.. வைரலாகும் புகைப்படம்

தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் வெற்றி நடை போட்டு வருகிறது கர்ணன் திரைப்படம். வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வரும் கர்ணன் திரைப்படம் தனுஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

ஜாதி ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தாலும் அதற்கான விளக்கத்தை படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு தான் வருகின்றனர். அந்த படத்தில் பயமுறுத்துவது போல் ஒரு உருவம் வரும்.

அந்த உருவத்தை அவ்வப்போது திரையில் காண்பிக்கும் போது பயமாக இருக்கும். எதற்காக இந்த உருவத்தை கொண்டு வருகின்றனர் என்ற காரணம் பல பேருக்கு புதிராக இருந்ததற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

அதாவது வீட்டில் திருமணம் ஆவதற்கு முன்பு இளம் வயதில் உள்ள பெண் இறந்து விட்டால், அந்த பெண்ணை கன்னி அம்மனாக அந்த குடும்பம் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவார்களாம்.

இந்த கலாச்சார வழிபாடு முறை திருநெல்வேலி மாவட்டத்தில் காலம் காலமாக இருந்து தான் வருகிறது. அந்த வழிபாட்டு முறையை தான் மாரி செல்வராஜ் இந்த படத்தில் தத்துரூபமாக கொண்டு வந்துள்ளார்.

அந்த குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுமியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே நடுரோட்டில் வலிப்பு வந்து இந்த குழந்தை இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். அப்போது பெரும்பாலோனோர் அந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கத் தவறியிருப்பார்கள். அந்தக் குழந்தையின் பெயர் பூர்வ தாரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த குழந்தையின் புகைப்படம்:-

karnan-girl-cinemapettai
karnan-girl-cinemapettai

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்