ரத்தம் சொட்ட சொட்ட ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த கர்ணன் பட போஸ்டர்.. கொலைவெறியில் பார்க்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தில் டப்பிங் வேலையை முடித்ததாக தனுஷ் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

விரைவில் படம் வெளியாக உள்ளதால் படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மற்றும் இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் படத்தினை பற்றி பல தகவல்களை பகிர்ந்தார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் வெற்றி அடைந்ததால் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது.

தற்போது படக்குழுவினர் படத்தின் புரமோஷனுக்காக படத்தை பற்றிய தகவல்கள் மற்றும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் தனுஷ் ஏதோ தவறு செய்து போலீசாரால் கைவிலங்கு போட்டபடி அமைக்கப்பட்டுள்ளது.

karnan-poster
karnan-poster

இதனை பார்க்கும்போது ஜாதியை சார்ந்த சமுதாயத்திற்காக போராடுவதால் போலீசாரால் கைது செய்யப்பட்டது போல் மாரி செல்வராஜ் கதையை அமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர் இயக்கிய பரிப்பெருமாள் திரைப்படமும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த எடுத்த காட்சிகள் மூலம் தான் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்