ஓவர் கெத்து காட்டிய ராஷ்மிகா.. கண்டுக்காமல் நோஸ்கட் செய்த காந்தாரா இயக்குனர்

கடந்த வருடம் அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கிய ராஷ்மிகா சமீபத்தில் பாலிவுட்டுக்கு சப்போர்ட் செய்து தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொண்டார். தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள இவர் ஹிந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அதில் இவர் நடித்திருக்கும் மிஷன் மஞ்சு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இவர் பாலிவுட்டில் ரொமான்டிக் பாடல்கள் வருவதாகவும், தென்னிந்திய படத்தில் அது போன்று இல்லை என்றும் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. அதை தொடர்ந்து அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது ராஷ்மிகா கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார்.

Also read: அவங்க ஒன்னும் கடவுள் இல்ல.. கேமராவை வச்சு பார்த்தார்களா, மீண்டும் எதிர்ப்பை சம்பாதித்த ராஷ்மிகா

ஆரம்பத்தில் அடுத்தடுத்து மூன்று கன்னட திரைப்படங்களில் நடித்த இவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதனால் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் அவ்வப்போது சில கன்னட திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் இப்போது முன்னணி இடத்தில் இருக்கும் ராஷ்மிகா கன்னடத்தை ஒதுக்கி விட்டு மற்ற மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருவதாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் அவர் கன்னட திரை உலகை அவமதித்ததாகவும் அவருக்கு அங்கு நடிப்பதற்கு தடை விதிக்க போவதாகவும் கூட பேசப்பட்டது. இந்த சர்ச்சை எல்லாம் ஒரு வழியாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அதற்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது. என்னவென்றால் காந்தாரா பட இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளிவந்த கிர்க்கி பார்ட்டி என்னும் படத்தில் தான் ராஷ்மிகா அறிமுகமானார்.

Also read: தூக்கி விட்டவர்களுக்கு செய்த துரோகம், ராஷ்மிகா படங்களில் நடிக்க தடை.. மேலும் அதிர்ச்சி கொடுத்த ரிஷப் ஷெட்டி

மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்திய அந்த திரைப்படம் வெளிவந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டது. அதை கொண்டாடும் வகையில் ரிஷப் செட்டி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அந்த ட்வீட்டை அந்தப் படத்தின் ஹீரோ ரக்ஷி செட்டி மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கு மட்டுமே டேக் செய்துள்ளார். படத்தின் நாயகியான ராஷ்மிகாவை மறந்தும் கூட அவர் டேக் செய்யவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அவர் இயக்கி, நடித்த காந்தாரா திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் உட்பட அனைவரும் மனம் திறந்து பாராட்டினார்கள். ஆனால் ராஷ்மிகா மட்டும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இது சோசியல் மீடியாவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. உடனே ராஷ்மிகா நான் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்று கூறினார். ஆனால் இப்போது நடந்த சம்பவத்தை பார்த்தால் ரிஷப் செட்டி, ராஷ்மிகா மீது கடுப்பில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. மேலும் அடுத்த பிரச்சனைக்கான ஆரம்பமாகவும் இது மாறி உள்ளது.

Also read: கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்