ஆஹா! ரஜினி கமல் இடத்திற்கு போட்டியா களமிறங்கும் ஷார்ப் ஹீரோ.. 35 வருடத்திற்கு அப்புறம் தமிழில் போடப்போகும் பட்டறை

Kannada super star shiva rajkumar will entered as a hero in tamil cinema: தமிழ் சினிமாவின் பரிமாண தேர்ச்சியின் விளைவாக தற்போது எடுக்கப்படும் முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் பான் இந்தியா மூவியாக வெளியாகி வசூலிலும் சக்கை போடு போடுவது வாடிக்கையாகி உள்ளது.

அதே போன்று தமிழ் ரசிகர்களும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று நடிப்பிற்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வேற்று மொழி நடிகர்களின் நடிப்புக்கு அடிமைப்பட்டு அவர்களை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான பாகுபலி, மஃப்டி, கே ஜி எஃப், சலார் போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள்.

Also read: தாய் முதல் தாரம் வரை.. ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் வாழ்வில் நிகழ்ந்த கோஇன்சிடன்ஸ்

சென்ற ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வசூலில் 650 கோடியை தாண்டி சாதனை புரிந்தது.  இப்படத்தில் ரஜினிக்கு இணையாக சில நிமிடங்களே வந்தாலும் மாஸ் காட்டி இருந்தனர் வேற்று மொழி ஹீரோக்கள். அதிலும் ரஜினியின் அன்புக்காகவே இப்படத்தில் ஒத்துக் கொண்டதாக கூறி கிளைமாக்ஸ் இல் அதிரடியாக ஆக்ஷனில் தெறிக்க விட்டிருந்தார் சிவராஜ்குமார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 35 வருடங்களுக்கு மேலாக கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் சிவராஜ்குமார் தற்போது கேப்டன் மில்லரில் தனுசு உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு பட ப்ரொமோஷனுக்காக வந்திருந்த சிவராஜ்குமார் சூசகமாக தமிழ் ரசிகர்களுக்கு ஹிண்ட்  கொடுத்து சென்றுள்ளார்.

அதாவது ரஜினி மற்றும் கமலிற்கு போட்டியாக கோலிவூட்டில் ஹீரோவாக கால் பதிக்க உள்ளார் சிவராஜ்குமார். ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குனர் வடிவேல் இயக்கத்தில் உருவாகும் தமிழ் படத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து உள்ளார்.

Also read: குடுமி, தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டும் தனுஷ்.. இணையத்தை ஆக்கிரமிக்கும் கேப்டன் மில்லர் போஸ்டர்