கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார் அவரது மகனான புனித் ராஜ்குமார் கன்னட சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தந்தைக்குப் பிறகு இவர்தான் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அனைத்து ரசிகர்களாலும் அழைக்கப்பட்டு வந்தார்.

இவருக்கு கன்னட சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்களை வெளியானால் அங்கு திருவிழா போல் காட்சியளிக்கும். இவரது நடனத்திற்கு ஏராளமான திரை பிரபலங்கள் ரசிகர்களாக இருந்துள்ளனர். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் விஜய் அஜித் போன்று இவருக்கு கன்னடத்தில் திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இப்படி திரை உலகில் பல ராசிகளை வைத்து இருந்த புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்து போலிஸ், ரசிகர்கள், மீடியா எனைவரும் மருத்துவமனையை சூழ்ந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது இயற்கை எய்தினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 46 வயதில் மாரடைப்பு வந்தது எல்லாருக்குமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது கன்னட திரை உலகமே சோகத்தில் உள்ளனர். மேலும் அவரது ரசிகர்களுக்கு இந்த இழப்பு ஈடுகட்ட முடியாது என பல பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழ் திரையில் இருக்கும் பல பிரபலங்கள் தற்போது புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு தங்களது வருத்தங்களையும் ஆழ்ந்த இரங்கல்களையும் கூறி வருகின்றனர். இளம் நடிகர்கள் பலருக்கு வரிசையாக நடக்கும் மரணங்கள் மிகபெரும் அதிர்ச்சியைஏற்படுத்தி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்