கமல் கைவசம் இருக்கும் 8 படங்கள்.. அரசியல நம்பி ஆண்டியாக முடியாதுன்னு ஆண்டவர் போடும் ஸ்கெட்ச்

அரசியலில் வேகம் காட்டிக் கொண்டிருந்த கமல் தற்சமயம் அதற்கு கொஞ்சம் பிரேக் எடுத்துவிட்டு படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து 4 படங்கள் கமல் நடிப்பில் வெளிவர இருக்கிறது. அதுபோக நான்கு படங்களில் கமிட்டாகி நடிக்கவிருக்கிறார் உலகநாயகன்.

இந்தியன் 2: கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்க பட்ட இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பில் கமலும், இயக்குவதில் சங்கரும் உச்சம் தொட்டு இருக்கிறார்கள்.

கல்கி 2898AD: கமலஹாசன் இரண்டாவது இன்னிங்ஸில் வில்லனாக நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுவரை கமல் வாழ்க்கையில் இல்லாத சம்பளமாக 150 கோடிகள் இந்த படத்திற்கு வாங்கி இருக்கிறார்

அரசியல நம்பி ஆண்டியாக முடியாதுன்னு ஆண்டவர் போடும் ஸ்கெட்ச்

தக் லைஃப்: 38 வருடத்திற்கு பிறகு மணிரத்தினத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் கமல். இந்த படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. 2024 அக்டோபர் மாதம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

இந்தியன் 3: ஜனவரி 2025 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் வெளிவர இருக்கிறது. இரண்டாம் பாகம் எடுக்கும்போதே மூன்றாம் பாகத்தையும் எடுத்து விட்டனராம். கிட்டத்தட்ட 2 லட்சம் அடிகளுக்கு மேல் இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் மூன்றாம் பாகம் 50 சதவீதம் முடிந்துவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது

தேவர் மகன் 2, பாபநாசம் 2 போன்ற படங்களும் அடுத்த கமலின் லைனப்பில் இருக்கிறது. தக் லைப் படம் முடிந்தவுடன் ஜித்து ஜோசப், இயக்கத்தில் பாபநாசம் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனிடையே எச் வினோத் இடமும் நல்ல கதையை கொண்டு வரும்படி பேசி இருக்கிறார்.

- Advertisement -