கமல் தனக்கே உரிய காமெடியில் கலக்கிய 6 படங்கள்.. எப்போதுமே ரசிக்கும்படி செய்த தெனாலி

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் பல எண்ணற்ற சாதனைகள் நிறைந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது ஆக்ஷன் படங்களை விட கலகல காமெடி படங்களுக்கு மவுசு அதிகம். அதில் வசூலிலும், ரசிகர்கள் மனதிலும் இன்றுவரை நம்பர் 1 இடத்தில் இருக்கும் திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

அபூர்வ சகோதரர்கள்: 1989ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் கமலஹாசன் நடித்திருப்பார். இதில் அப்பு என்ற கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கதாபாத்திரம் எனலாம். படத்தின் முதல் பாகத்தில் முழுவதும் நகைச்சுவையான காட்சிகள் இடம் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தில் சென்டிமென்ட் காதல் அழுகை என இத்திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்பு வியந்து பார்க்க வைக்கும் பார்க்கும் வகையில் அமைந்தது. 200 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிய இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் மதன காமராஜன்: 1990 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் கமலஹாசன் நான்கு வேடங்களில் நடித்திருப்பார். முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இத்திரைப்படம் கமலஹாசனுக்கு அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்குப் பின் நல்ல பெயரை கொடுத்தது எனலாம்.

Also Read : 80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

அவ்வை சண்முகி: 1996ஆம் ஆண்டு ரிலீசான அவ்வை சண்முகி திரைப்படம், கமல்ஹாசனின் கேரியரில் முக்கியமான திரைப்படம் எனலாம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் கமலஹாசன் பிரிந்து வாழும் தன் மகளுக்காகவும், தன் மனைவிக்காகவும் ஐயர் மாமி வேஷம் போட்டு பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். மாமனாராக நடித்த ஜெமினி கணேசன் கமலஹாசனின் மாமி கெட்டப்பில் மயங்கிய காமெடிகள் இன்றுவரை பலராலும் சிரிக்க வைக்கக் கூடும்.

தெனாலி: 2000ஆண்டு கமலஹாசன், ஜெயராம் உள்ளிட்ட நடித்த தெனாலி திரைப்படத்தில், கமலஹாசனுக்கு எதைப் பார்த்தாலும் பயப்படக்கூடிய நோய் இருக்கும். அதை சரி செய்வதற்காக டாக்டராக இருக்கும் ஜெயராமனிடம் கமலஹாசன் ட்ரீட்மென்டிருக்கு வருவார். அப்போது அங்கேயே தங்கி ஜெயராமனின் தங்கையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொள்வார். இத்திரைப்படத்தில் ஜெயராமன் கமலஹாசனிடம் இருந்து ஜோதிகாவை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என பல நகைச்சுவையான விஷயங்களை செய்து சொதப்பும் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்..

Also Read : கமலஹாசன் தூவிய விதை.. தாலி நோ, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தில் ஊறிப்போன 8 ஜோடிகள்

பஞ்சதந்திரம்: 2002 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான பஞ்சதந்திரம் திரைப்படத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் படத்தின் கதை நகரும். தாங்கள் செய்யாத கொலைக்காக கமலஹாசனும் அவர்களது நண்பர்களும் அவர்கள் மேலே பழி போட்டுக் கொண்டு செய்யும் நகைச்சுவை காட்சிகள 90 ஸ் கிட்ஸின் விருப்பமான திரைப்படம் எனலாம்

வசூல்ராஜா எம்பிபிஎஸ் : 2004ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான முன்னா பாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தின் ரீமேக்காகும். தனது மாமன் மகளான சினேகாவை திருமணம் செய்து கொள்ள, மாமனாரான பிரகாஷ்ராஜின் கல்லூரியிலேயே டாக்டர் படிப்பு சேர்ந்து படிப்பார். கமலஹாசன், அங்கு அவரது மெட்ராஸ் பாஷையில் பேசி பிரகாஷ்ராஜை கடுப்பேற்றும் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். கமலஹாசனின் கட்டிப்பிடி வைத்தியம் இத்திரைப்படத்தின் மூலமாக பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பாலிவுட் சினிமா பக்கமே வரக்கூடாது.. முட்டை வீசி விரட்டப்பட்ட கமலஹாசன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்