நமத்து போன பட்டாசுனு கிடப்பில் போடப்பட்ட கமலின் 5 படங்கள்.. ஆரம்பிக்கும் முன்பே 8 கோடி நஷ்டம்

Kamal’s 5 films that were put on hold: யாரும் செய்ய முடியாததை செய்யத் துணியும் நடிகர் தான் உலக நாயகன் கமலஹாசன். நடிப்பில் இவரை மிஞ்ச எவராலும் முடியாது என்று சொல்லும் அளவிற்கு நம்மவர் நாயகன். ஒப்பற்ற கலை திறமையுள்ள ஆகச் சிறந்த நடிகர் கமல் நினைத்தால் மட்டுமே சில படங்களுக்கு உயிர் கொடுக்க முடியும். அப்படி இவர் நடிப்பில் சில படங்கள் உருவாக்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இந்த படங்களை எப்படியாவது உயிர் கொடுத்து திரையில் காண்பிக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர் நடிப்பில் உருவாகிய எத்தனையோ படங்கள் வெளிவர முடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சில படங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படங்கள் இருக்கிறது. அது என்ன என்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம்.

கிடப்பில் போடப்பட்ட கமலின் படங்கள்

மகளிர் மட்டும்: தமிழில் வந்த மகளிர் மட்டும் என்ற படத்தை ரீமேக் செய்து வெளியிட கமல் திட்டமிட்டு இருந்தார். இப்படத்தை கமல் தயாரிப்பில் சீமா, ஷில்பா மற்றும் ஹீரா ஆகிய மூன்று பெண்களின் கதையை வைத்து அமைக்கப்பட்டது. இவர்களின் முதலாளியாக ரந்தீர் கபூர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் இவருக்கு சரியான பாடத்தை கற்பிக்கும் விதமாக மூன்று பேரும் சேர்ந்து விசித்திரமான சில செயல்களை நக்கல் நையாண்டி உடன் இருக்குமாறு கதை அமைக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ஏற்படத்தை வெளியிடப்படாமல் போய்விட்டது.

மருதநாயகம்: 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கி வேலங்குடியில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் கமலஹாசன் நண்பர் ஒருவரின் கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு வாக்குவாதம் ஆனது. அதனால் இப்படத்தை கமலுடன் இணைந்து தயாரிக்க திட்டமிருந்த ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் பின்வாங்கியது.

அடுத்து இப்படத்தின் பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு இப்படத்தை புதுப்பிக்கும் விஷயமாக கமல் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ஆனாலும் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் படம் ஆரம்பிக்கும் முன்னே கமல் அவருடைய 8 கோடி பணத்தை செலவு செய்திருந்தார். அது அத்தனையும் நஷ்டமாகி போய்விட்டது.

சபாஷ் நாயுடு: கமல் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது சபாஷ் நாயுடு தான். அதனால் புதிதாக இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டும் வகையில் ஒரு நகைச்சுவையான படத்தை எடுக்கலாம் என்று முயற்சி எடுத்தார் அதற்காக தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை கோர்த்து விட்டார். ஆனால் அந்த நேரத்தில் கமல் காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் இப்படத்தை பாதிலேயே நிறுத்திவிட்டார்.

மார்க்கண்டேயன்: இப்படம் முழுக்க முழுக்க இயக்குனரின் அஜாக்கிரதையால் கைநழுவி போனது என்றே சொல்லலாம். அதாவது 1990 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோகன் கமல்ஹாசனை வைத்து ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க நினைத்தார். ஆனால் கதை எதுவும் ஒத்து வராததால் இந்த படம் டிராப் ஆகிவிட்டது.

அமர காவியம்: அவ்வை சண்முகி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அமரகாவியம் என்ற தலைப்பில் கதையை எழுதினார். இப்படத்தை இவருடைய மனைவி சரிகா இயக்குவதாக இருந்தது. இதில் நக்மா மற்றும் ஷில்பா ஷெட்டி நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. ஆனால் இப்படத்திற்கு லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தேவைப்பட்டதால் அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக அமெரிக்கா போயிருந்தார். போயிட்டு வந்தவர் இந்த படத்தை பற்றி எதுவும் பேசாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று கிடப்பில் போட்டு விட்டார்.

இது மட்டுமில்லாமல் இப்படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் ஆரம்பித்து பேச்சு வார்த்தைகள் எல்லாம் முடிந்த நிலையில் சில படங்களில் கதைகள் நமத்துப் போன பட்டாசாக புஸ்ஸுன்னு போய்விட்டது.

தோல்வியால் கல்லாவை காலி செய்த கமல்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -