Kamalhassan: சினிமாவில் பல விஷயங்களை புதுசு புதுசாக கொண்டு வந்து, தன்னுடைய சாமர்த்தியத்தால் நடிப்பிலும் பேச்சிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து உலக நாயகனாக சுற்றி வருகிறார் கமல்ஹாசன். அப்படிப்பட்ட இவரிடம் எக்கச்சக்கமான உலக சம்பந்தப்பட்ட சிந்தனை விஷயங்கள் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் அதை எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதில் இவர் மிகப்பெரிய ஞானி என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு கைவசம் ஏகப்பட்ட திறமைகளை வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் சினிமாவில் ஜெயித்ததோடு இல்லாமல் அனைத்து விஷயங்களிலும் ஜெயித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக வெற்றி அடைந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது சீசன் 7 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் போட்டியாளர்களை கட்டுக்கோப்பாக வைத்து அவர்களுக்கு நல்வழியை காட்டி வருகிறார். அத்துடன் அவ்வப்போது அரசியல் சம்பந்தப்பட்டமான விஷயங்களையும் பேசி பொதுவான சிந்தனைகளுக்கு மக்களிடம் கவனத்தை பெற்று வருகிறார். இவருடைய பேச்சைக் கேட்பதற்காகவே பிக் பாஸை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இவர் பேசிய ஒரு விஷயம் ரொம்பவே டிரெண்ட் ஆகி வருகிறது.
அதாவது சமிப காலமாக இளைஞர்கள் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அபாயத்தை குறித்து விழிப்புணர்வாக பேசியிருக்கிறார். அதில் மூன்று முக்கிய காரணங்களை சொல்லி இருக்கிறார். அதில் சரியான உறக்கமின்மை, அதற்கேற்ற மாதிரி சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது மற்றும் உடலுக்கு தேவையான ஆக்டிவிட்டி இல்லாமல் இருப்பது.
அதாவது ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்று சொல்வார்கள். அதற்கேற்ற மாதிரி நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்போதைய காலத்தில் அனைவரும் கொஞ்சம் சோம்பேறியாகி விட்டோம். உடலுக்கு எந்த பயிற்சியும் கொடுக்காமல் சொகுசாக நாம் அனைவரும் இருப்பதினால் தான் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கிறது.
அதனால் என் தம்பிமார்களுக்கும் தங்கைகளுக்கும் நான் என் அன்பினால் சொல்லக்கூடிய விஷயங்கள் இது. அதனால் முடிந்தவரை அனைவரும் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூகத்தின் மீது இவருக்கு இருக்கும் உண்மையான அக்கறையை காட்டியிருக்கிறார். இப்படி சமூகத்தின் மீது அதீத அன்பு, அக்கறை காட்டும் ஒரே தலைவர் நம்முடைய உலக நாயகனாக மட்டுமே இருக்க முடியும்.