சிம்புவை வைத்து காய் நகர்த்தும் கமல்.. எதிர்பார்க்காத மெகா கூட்டணி.!

கடந்தாண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இவரின் அடுத்த படமான பத்து தல படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்தது மற்றும் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்குப் பிறகு சிம்பு அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் ஏதும் அறிவிக்கவில்லை என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் இவரின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி நிலவியது. இதனைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் மற்றும் மிஸ்கின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று வதந்தி கிளம்பியது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணியுடன் கைகோர்க்க இருக்கிறார்.

Also read: ஒத்த தலைய காவு வாங்க பத்து தலையுடன் களத்தில் குதித்த சிம்பு.. வெற்றி இயக்குனருக்கு வைக்கும் செக்

அதாவது சமீபத்தில் சிம்புவிற்கு வெளியாகி வந்த படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடி அதிக அளவில் பாராட்டைப் பெற்றார். அதனால் இப்பொழுது இவருக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட கமல், தற்போது சிம்புவை வைத்து காய் நகர்த்த முடிவு செய்து இருக்கிறார்.

ஒரு பக்கம் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்திற்காக பாராட்டுகளையும், லாபத்தையும் பெற்றார். அதே மாதிரி இப்பொழுதும் லாபத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இருக்கிறார். தற்போது கமலஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்க, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி படத்தை இயக்கப் போகிறார். இவர் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தை இயக்கியவர்.

Also read: எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் பிரதீப் ரங்கநாதன்.. லவ் டுடே படத்தால் சிம்பு இடத்தை தட்டி தூக்கிய ஹீரோ

மேலும் சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணியை பார்த்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சிம்புக்கு சமீப காலமாகவே படங்கள் வெற்றியடைந்து அவருக்கு ஏறுமுகமாக தான் இருக்கிறது. அதே மாதிரி கமலுக்கும் இது ஒரு நல்ல நேரம்தான் என்றே சொல்லலாம்.

இதனால் இவர்கள் கூட்டணி வெற்றி அடையும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை கமல் கூடிய விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கௌதம் மேனனின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. சிம்புக்கு வாழ்க்கை கொடுத்த ஒரே படம்

- Advertisement -