Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3 தேசிய விருதுகளை வென்ற சரித்திர படம்.. இன்று மாலை நேரடியாக யூடியூப் சேனலில் வெளியிடும் கமல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.

kamal-cinemapettai

Actor Kamalhassan: சினிமாவை பொருத்தவரை கமலுக்கு கிடைத்த பெயர் என்சைக்ளோபீடியா. அந்த அளவிற்கு எல்லாம் கற்றுத் தெரிந்த ஞானத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார். சரித்திரம் நின்னு பேசும் என்று சொல்வதற்கு ஏற்ப இவருடைய படங்கள் அனைத்தும் காலம் கடந்த பின்னும் பேசப்பட்டு வருகிறது.

அப்படி இவர் நடித்த படங்களும் சரி, இயக்கிய படங்களும் சாதனை படைக்கும் அளவிற்கு தான் வரலாறு படைத்திருக்கிறது. அந்த வகையில் தேவர் மகன், நாயகன், ஆளவந்தான், ஹேராம் இன்னும் இது போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் என்றுமே அளிக்க முடியாத மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: விக்ரம் படம் ஒன்னும் கமலால ஓடல.. ரஜினியை மிஞ்சிட்டோமுன்னு நினைக்கவே கூடாது ஏன் என கூறும் பிரபலம்

அந்த வகையில் 2000 ஆண்டு கமல் இயக்கத்தில் பீரியட் ட்ராமாவாக ஹேராம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை எழுதி, இயக்கி,திரைக்கதை மற்றும் உருவாக்கியது அனைத்துமே உலக நாயகன் தான். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இதில் ஷாருக்கான் மற்றும் ராணி முகர்ஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் உள்ளுணர்வை புரிந்த ஷாருக்கான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.

அதற்கு காரணம் எதிர்காலத்தில் மீண்டும் இது போன்ற கதை மற்றும் பட வாய்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கதையின் முக்கியத்துவத்திற்காக நடித்துக் கொடுத்தார். ஆனால் இந்த படத்தின் அடையாளமாக கமல், ஷாருக்கானுக்கு வாட்ச் பரிசளித்தார். மேலும் இப்படம் இந்திய- பாகிஸ்தான் பிரிவினையும், மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே படுகொலை செய்வதும் காட்சிப்படுத்தப்பட்டது.

Also read: அடுத்த 5 படங்களை வைத்து கமல் போட்டிருக்கும் வசூல் டார்கெட்.. பிரம்மாண்ட கூட்டணியின் மொத்த லிஸ்ட்

இப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கமலின் கேரியரில் வித்தியாசமான படமாக ஆனது. அப்படிப்பட்ட இப்படத்தை இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். இதனை இவர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றுக் கொடுத்தது. அது மட்டுமன்றி சர்வதேச அளவிலும் இப்படத்திற்கு பாராட்டுகளை கொடுத்துள்ளார்கள். இப்படிப்பட்ட படத்தை இன்று சுதந்திர தினத்தன்று கடந்த கால உணர்வை பெறுவதற்கு ஹேராம் படத்தைப் பார்க்க தூண்டுகோலாக இருக்கும்.

Also read: இந்தியன் 2  ரிலீஸ்க்கு முன்பே 130 கோடி கலெக்சனுக்கு ரெடியாகும் கமல்.. சங்கரை அனுப்பி வைத்துவிட்டு போட்ட பிளான்

Continue Reading
To Top