தம்பி லோகேஷ், விக்ரம் பட கதையை கொண்டு வாங்க.. உங்கள நம்ப முடியாது என உஷாராகும் கமல்!

முன்னணி நடிகர்கள் அனைவருமே தற்போது லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் அவர் செய்த சித்து வேலை தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

சமீபத்தில் மாஸ்டர் என்ற பிரமாண்ட படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

முதலில் தேர்தலுக்கு முன்பாக விக்ரம் படம் உருவாக இருந்த நிலையில் தற்போது கமல் அரசியலில் பிசியாக இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளலாம் என லோகேஷ் கனகராஜிடம் கூறிவிட்டாராம்.

இந்த கேப்பை பயன்படுத்தி வேறு ஒரு படத்திற்கு கதை எழுதிக் கொண்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையில் கமல் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தொடர்புகொண்டு விக்ரம் படத்தின் முழு கதையையும் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வலுவாக அமைந்ததை விஜய் கவனிக்காமல் விட்டதால் படம் வெளியான பிறகு விஜய் சேதுபதி படமாகிவிட்டதல்லவா. அதேபோல் தற்போது விக்ரம் படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

vikram-kamal
vikram-kamal

இதன் காரணமாக தன்னை விட வில்லன் நடிகருக்கு ஏதேனும் முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதியுள்ளாரா என சோதனை செய்வதற்காக லோகேஷ் கனகராஜை மொத்த கதையையும் எடுத்துக் கொண்டு வாருங்கள் என கமல் போன் பண்ணியுள்ளார். மேலும் படித்துவிட்டு கதையில் சில மாற்றங்களையும் செய்யச் சொல்லி உள்ளாராம்.

- Advertisement -