கமலுக்கு கிடுக்குப்பிடி போட்ட லைகா.. இனி தப்பிக்க வாய்ப்பு இல்ல ராஜா!

கமல்ஹாசன் மற்றும் லைகா நிறுவனம் பஞ்சாயத்து பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பாதிக்கிணறு தாண்டிய நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

கமலஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து கொண்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் படப்பிடிப்பு கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பலமுறை இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து படப்பிடிப்பு தள்ளி கொண்டே சென்றது. கடைசியில் லைகா நிறுவனம் ஷங்கரிடம் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லியதில் கடுப்பான சங்கர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியன் 2 படத்தை விட்டு விலக ஆரம்பித்தார்.

ஏற்கனவே விபத்துக்கு நஷ்ட ஈடு வழங்கியதில் கமலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையில் பஞ்சாயத்து ஏற்பட்டு கமல் அப்போதே ஓரம் கட்டிவிட்டார். இந்நிலையில் முக்கிய ஆட்கள் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகியதும் லைகா நிறுவனத்திற்கு ஒன்றுமே புரிய வில்லையாம்.

இது சம்பந்தமாக ஷங்கர் மற்றும் கமலை அழைத்து பலமுறை பேச முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்காததால் சமீபத்தில் ஷங்கர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் ஷங்கர் தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் என ஒப்பந்தமாகி விட்டார்.

இவ்வளவு நாட்களாக தேர்தலைக் காரணம் காட்டி இந்தியன் 2 படத்தை தள்ளிப் போட்ட கமல் ஹாசன் தற்போது தேர்தலில் தோற்று விட்டதால் இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் தப்பிக்க முடியாது என லைகா இதுதான் சமயமென கிடுக்கு பிடி போட்டு அவரது கழுத்தை நெரித்து வருகிறதாம். இதனால் விக்ரம் படத்தை முடித்தவுடன், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் கமலஹாசன்.

indian2-cinemapettai
indian2-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்