வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லோகேஷ் பாணியில் பிட்டு போட்ட எச் வினோத்.. கிரீன் சிக்னல் கொடுக்க யோசிக்கும் கமல், ஆண்டவரே?

Kamal Haasan – H.Vinoth: உலகநாயகன் கமலஹாசன், விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் எச்.வினோத்துடன் தன்னுடைய 233 வது படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கிடையில் ஏற்கனவே படமாக்கப்பட்டு பாதியில் நின்றிருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அந்த படம் இப்போது ரிலீசிற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று கல்கி படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

கமல் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் மீது எல்லோருக்குமே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி இதுவரை கமல் நடிக்காத கேரக்டரில் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது. KH 233 என்று அடையாளப்படுத்தப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது.

கமலுக்கு இதற்கு முந்தைய படமான விக்ரம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது. கமல் எண்பதுகளில் ஹீரோவாக நடித்து மாஸ் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தின் பெயரை தான் இந்த படத்திற்கு வைத்திருந்தார்கள். மேலும் இதை விக்ரம் 2 என்றும் சொல்கிறார்கள். பழைய விக்ரம் படத்தின் கதையை தழுவி, கமல் அதே ஏஜென்ட் ஆக வயதானதிற்குப் பிறகு நடக்கும் சம்பவமாக எடுக்கப்பட்டிருந்தது.

விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனாலேயே அந்த படம் பேன் பாய் மொமெண்டாக அமைந்துவிட்டது. லோகேஷ் கேட்டவுடனேயே கமலும் விக்ரம் படத்தின் டைட்டிலை கொடுத்து இருக்கிறார். இப்போது லோகேஷ் பாணியை தான் எச் வினோத் கையில் எடுத்திருக்கிறார்.

கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்திற்கு பிறகு, அவர் மர்மயோகி என்னும் படத்தை எடுக்க இருந்தார். இந்த படத்தில் வெங்கடேஷ் மற்றும் மோகன்லாலை நடிக்க வைக்க இருந்தார். இந்த படம் 2004, 2007, 2008 போன்ற வருடங்களில் தொடங்கப்பட்டு பின் ஏதோ ஒரு காரணங்களால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்காக கமல் நீளமான தாடி கூட வைத்திருந்தார்.

இந்த மர்மயோகி டைட்டிலைத் தான் தற்போது KH 233க்கு வைக்கலாம் என எச் வினோத் சொல்லி இருக்கிறார். ஆனால் கமலுக்கு அந்த டைட்டிலை கொடுக்க விருப்பம் இல்லையாம். விக்ரம் அல்லது சூர்யாவை வைத்து அந்த கதையை எடுப்பதற்கு கமல் திட்டமிட்டு வைத்திருக்கிறாராம். அதனால் தான் இப்போது கிரீன் சிக்னல் கொடுக்க மறுக்கிறார். லோகேஷிற்கு விக்ரம் டைட்டிலை கொடுத்துவிட்டு எச் வினோத்துக்கு ஆண்டவர் இப்படி பண்ணுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லாதது போல் இருக்கிறது.

- Advertisement -

Trending News