தங்கலான் பார்த்து மிரண்டு போன கமல்.. சூர்யாவை தூக்கிவிட்டு விக்ரமை போட்டு உருவாக்கும் வரலாற்று படம் 

தங்கலான் டீசர் வந்ததிலிருந்து பல ரசிகர்கள் அதைப்பற்றி பேசி வருகிறார்கள். படம் எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல பிரபலங்களும் இந்த படத்தில் சீயான் விக்ரமின் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். அந்த வரிசையில் கமலும் இந்த டீசரை பார்த்து மிரண்டு போய் உள்ளார்.

அதன் காரணமாக சூர்யாவை தூக்கிவிட்டு சீயான் விக்ரமை வைத்து அவருடைய கனவு திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் உள்ளார். தங்கலான் படத்தில் விக்ரமை பார்க்கும் பொழுது மருதநாயகம் படத்தில் வரும் கமல் போன்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நடித்துள்ளார், உருவத்தை மாற்றியுள்ளார். 

Also Read: மருதநாயகம் போல் கிடப்பில் போடப்பட்ட படம்.. மீண்டும் கதையை சொல்ல சொன்ன சூப்பர் ஸ்டார்

முதலில் கமல் மருதநாயகம் படத்தை, விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிவிட்ட சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாக ஒரு திட்டம் இருந்தது. தற்போது அதை மாற்றி சீயான் விக்ரமை வைத்து எடுக்க இருக்கிறாராம்.

கமலஹாசனின் கனவு திரைப்படம் என்றால் அது மருதநாயகம் தான். 1997ல் பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த படம் பட்ஜெட் பிரச்சனை காரணமாக பாதியிலேயே டிராப் ஆனது.  இதில் 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக  கிளர்ச்சி செய்த முகமது யூசுப் கான் என்ற மருதநாயகம் பற்றிய கதைதான் இந்த திரைப்படம்.

Also Read: பாகுபலி உடன் ஒத்துப்போகும் தங்கலான்.. பா ரஞ்சித்துக்கும், ராஜமவுலிக்கும் இதுதான் வித்தியாசம்

26 வருடங்களுக்குப் பிறகு மருதநாயகம் படத்தை கையில் எடுத்திருக்கும் கமலஹாசன் இந்த முறை எந்த பிரச்சனையும் வரவிடாமல் செயல்பட திட்டமிட்டுள்ளார். மருதநாயகம் படத்தில் மிகக் கடினமான காட்சிகளான அந்த 30 நிமிட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதால் மீதம் இருக்கும் காட்சிகளை  விக்ரமை வைத்து எடுக்க, இப்போது கமல் ஆசைப்படுகிறார்.

அதேபோல் தங்கலான் டீசரை பார்த்த கமல் படத்தின் முதல் காபி ரெடி ஆனதும் முதல் ஆளாக நான் வருகிறேன் என்று இயக்குனரிடம் பேசி இருக்கிறாராம். அந்த அளவிற்கு விக்ரம் மீது அவரது நடிப்பின் மீதும் ஆர்வமாக இருக்கும் கமல், அவரை வைத்து மருதநாயகத்தை இயக்குவதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும்.

Also Read: 57 வயதில் விக்ரமின் அசர வைக்கும் சொத்து மதிப்பு.. தோல்வி துரத்தினாலும் வருடத்திற்கு இவ்வளவு சம்பளமா?

- Advertisement -